23.9 C
Chennai
Thursday, Nov 20, 2025
sol
சிற்றுண்டி வகைகள்

சோளா பூரி

தேவையானப்பொருட்கள்

மைதா மாவு – ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு கப்
ரவா – அரை கப்
தயிர் – கால் கப்
உப்பு – முக்கால் தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

மாவு நன்கு ஊறியதும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து சப்பாத்திக் கட்டையில் வைத்து சற்று பெரியதாக தேய்க்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரியைப் போட்டு பொரிக்கவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.

சுவையான சோளா பூரி தயார். சன்னா மசாலாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
sol

Related posts

பட்டாணி தோசை

nathan

சுவையான ஆம வடை

nathan

பிரெட் வெஜ் ஆம்லெட்

nathan

லெமன் இடியாப்பம்

nathan

வெந்தய தயிர் பச்சடி

nathan

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்!

nathan

இஞ்சித் தொக்கு

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

கொய்யா இலை பஜ்ஜி

nathan