சென்னை கொளசர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ்,31. பெயிண்டராக பணிபுரிகிறார். இவர் தனது சித்தியுடன் கள்ளத்தொடர்பு பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். இதையறிந்த அவனது அத்தை குணசுந்தரி கோபமாக அவனிடம் தகராறு செய்தாள்.
அதுமட்டுமின்றி கடனை திருப்பி தருமாறும் என்னை துன்புறுத்தி வந்துள்ளார். சித்தியுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அத்தையை கொலை செய்ய திட்டமிட்டாார்.
இதனால், மே 15, 2020 அன்று, அவர் தனது அத்தை குணசுந்தரியைக் கத்தியால் குத்திக் கொன்றார். இச்சம்பவம் தொடர்பாக கணேஷை கைது செய்து, கொளசர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
அதில், கணேஷின் அத்தை குணசுந்தரியை கொலை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி போலீசார் நிரூபித்ததையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.