சமையல் குறிப்புகள்

சுவையான ப்ராக்கோலி சப்ஜி

தேவையான பொருட்கள்:

* ப்ராக்கோலி – 1 பெரிய கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* கடலை மாவு – 1/4 கப்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

Broccoli Besan Sabzi Recipe In Tamil
* பின் அதில் ப்ராக்கோலியைப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும். பின் மூடி வைத்து ப்ராக்கோலி நன்கு வேக வைக்க வேண்டும்.

* ப்ராக்கோலி வெந்ததும், தீயைக் குறைக்க வேண்டும் பின்பு அதில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* சப்ஜியில் இருந்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி வேக வைத்து இறக்கினால், சுவையான ப்ராக்கோலி சப்ஜி தயார்.

Related posts

சுவையான வல்லாரைக் கீரை துவையல்

nathan

சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி

nathan

முந்திரி வெஜிடேபிள் குருமா

nathan

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

sangika

சுவையான அரிசி மாவு தேங்காய் ரொட்டி

nathan

சுவையான கத்திரிக்காய் பக்கோடா

nathan

ஆஹா பிரமாதம்! மொறு மொறு பிஷ் ஃபிங்கர்ஸ்…

nathan

சுவையான மணமணக்கும் பருப்பு ரசம்!

nathan

KONDAKKADALAI SUNDAL/ கொண்டைக்கடலை சுண்டல்

nathan