1 mangopoori 1656424471
சமையல் குறிப்புகள்

மாம்பழ பூரி

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 1 கப்

* மாம்பழ கூழ் – 1/4 கப்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மாம்பழ கூழ், ஏலக்காய் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் விரல்களால் மெதுவாக கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

Mango Poori Recipe In Tamil
* பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், தேய்த்ததை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்தால், மாம்பழ பூரி தயார்.

குறிப்பு:

* உங்களுக்கு பூரி இனிப்பாக வேண்டுமானால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இதற்கு மேல் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் பூரி எளிதில் கருகிவிடும்.

* மாம்பழ கூழ் சேர்ப்பதால் வழக்கத்தை விட வேகமாக பூரி வெந்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.

Related posts

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

சுரைக்காய் குருமா!

nathan

சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி !….

sangika

சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

nathan

சுவையான சேப்பங்கிழங்கு டிக்கி வீட்டிலேயே செய்யலாம்…..

sangika

சுவையான சிக்கன் டிக்கா மசாலா

nathan

சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி

nathan

பூரி மசாலா

nathan

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி இரகசியம் இதுதான் !!!

nathan