ditemenu1
ஆரோக்கிய உணவு

இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க…! : உடல் எடை அதுவாக குறையும்

எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள்.

உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை.

ஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமென இருக்க போவதில்லை, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.

ஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

1. வாழைப்பழம்

இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது.

2. ஓட்ஸ் உணவு
ஓட்ஸ் உணவு கொழுப்புச்சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையை குறைக்க சீரிய முறையில் உதவும். அரை கப் ஓட்ஸ் உணவு போதுமானது.

3. தானிய உணவுகள்
தானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.

4. முட்டை
இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும்.

வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. கொழுப்பு நீக்கப்பட்ட பால்
இரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.ditemenu1

Related posts

கர்ப்ப காலத்தில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிறந்த சிகிச்சை

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

nathan

சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?தெரிந்துகொள்வோமா?

nathan

கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

sangika

வாரத்திற்கு நான்கு நாள் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் சீரகத் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மையா..?

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்களாம் பால் குடிக்கக்கூடாதாம்..

nathan

நீங்கள் ஜவ்வரிசி சாப்பிடுபவர்களா?அப்ப இத படிங்க!

nathan