தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்தது)
* பூண்டு – 5 பற்கள்
* வரமிளகாய் – 2
* வல்லாரைக் கீரை – 2 கப்
* தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் – 1 டீஸ்பூன்
* புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மிளகு, வரமிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வல்லாரைக் கீரையை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான வல்லாரைக் கீரை துவையல் தயார்.