28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
badedf02 078a 4252 92b4 6ddc7a314a1c S secvpf
சிற்றுண்டி வகைகள்

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள் :

கொத்தவரங்காய் – கால்கிலோ,
து.பருப்பு – 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – இரண்டு,
பூண்டு – இரண்டு பல்,
இஞ்சி – சிறிய துண்டு
கடுகு, உ,பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தாளிக்க.

செய்முறை :

• கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• து.பருப்பை கால் மணி நேரம் ஊறவைக்கவும். பின், இத்துடன், மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதை இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.

• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உ.பருப்பு, தாளித்து கொத்தவரங்காயை சேர்த்து சமையல் சோடா போட்டு நன்கு வதக்கவும்.

• பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு டீஸ்பூன் தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு மூடிவைத்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து வேகவைத்து உதிர்த்த து.பருப்பையும் கொட்டிக் கிளறி இறக்கவும்.

குறிப்பு; கொத்தவரங்காயை இந்த கலவையில் சாப்பிட்டால் வாயு சேராது. சீக்கிரம் செரித்துவிடும். சமையல் சோடா சேர்த்திருப்பதால் கொத்தவரங்காய் நிறம் மாறாது.badedf02 078a 4252 92b4 6ddc7a314a1c S secvpf

Related posts

ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா…?

nathan

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

பூசணி அப்பம்

nathan

பாலக் ஸ்பெகடி

nathan

சுவையான சுண்டல் கிரேவி

nathan

மசாலா பூரி

nathan

ரவைக் கிச்சடி

nathan

உருளைக்கிழங்கு ரோல்

nathan