உருளைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.
உருளைக்கிழங்கு காரத்தன்மை நிறைந்தது. எனவே புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி. இதில் சிறுநீரகத்தை சீராக இயக்கும் சக்தி உள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கும்.
இந்தக் கிழங்கு நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும்.
குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.
குறிப்பு: வாய்வு தொல்லை உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது.