இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தினமும் ஏதாவது எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் வாக்கிங், ஜாகிங் போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் போதும் என்பது தவறு.
உடற்பயிற்சிக்கு கார்டியோ மற்றும் எடைப் பயிற்சி மிகவும் அவசியம்.
அந்த வகையில் இந்த சீட்டட் கேபிள் ரோ பயிற்சி முதுகு பகுதியை வலுவாக்கும் தன்மை கொண்டது. இது முதுகுத் தசைகளுக்கு வலு அளிக்கும் பயிற்சி. பிரத்யேக ஜிம் கருவியில் அமர்ந்து மூச்சை உள்ளிழுத்தபடி அதில் உள்ள கயிற்றைப் பிடித்து இழுக்க வேண்டும்.
இழுக்கும்போது எந்தச் சிரமமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, கைப்பிடியை வயிறு வரை கொண்டு செல்ல வேண்டும். பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பொறுமையாக அதை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதில் பயிற்சிக்கு ஏற்ப எடையை அதிகரித்துக்கொள்ளலாம். படிப்படியாக தான் எடையை அதிகரிக்க வேண்டும் ஆரம்பத்திலேயே அதிக எடையை பயன்படுத்தக்கூடாது.
இந்த பயிற்சியை பயிற்சியாளரின் துணை இல்லாமல் செய்யக்கூடாது.