30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
பெண்கள் மருத்துவம்

பெண்மையை அதிகரிக்கச் செய்யும் கல்யாண முருங்கை

‘கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில், கல்யாண முருங்கை இருக்கவேண்டும்’ என்றொரு பழமொழி உண்டு. கல்யாண முருங்கையின் மகத்துவம் பற்றி சித்த மருத்துவம் பக்கம், பக்கமாக கூறுகிறது.

பெண்களுக்காக பிரத்யேகமாக படைக்கப்பட்ட ஒரு தாவரம் என்று இதை சொல்கிறது. இந்த செடி இருக்கும் வீடுகளில் பெண்மை சார்ந்த எந்த நோயும் வராது என்ற ஐதீகமும் இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு பெண்மையை அளிப்பது ஹார்மோன்தான். இதை நாளமில்லா சுரப்பி என்கிறார்கள். இந்த சுரப்பில் ஏதேனும் கோளாறு இருந்தால் அதை நிவர்த்தி செய்யக்கூடிய தன்மை இந்த கல்யாண முருங்கை இலைக்கு உள்ளது.

இந்த இலையை அடையாக செய்து சாப்பிடலாம், தோசையாகவும் செய்யலாம். ‘சூப்’பாகவும் பருகலாம். இதனால் பெண்மைக்கான ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பெண்ணின் அழகும், கவர்ச்சியும் கூடும்.

இன்றைய பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள் அதிகம் இருக்கிறது. அவற்றை இந்த கல்யாண முருங்கை இலை அற்புதமாக குணப்படுத்துகிறது. கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி சரியாக இருக்க எண்டோமேர்டியம் என்ற சதை கர்ப்பப்பையின் உள்ளே வளருகிறது. இந்த சதை வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் கரு அதனுடன் ஒட்டி குழந்தையாக உருவெடுக்கும்.

இன்று பெண்கள் துவர்ப்பான, நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதில்லை. துரித உணவு, மன அழுத்தம் போன்ற பலவற்றாலும் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய கருப்பை உட்புற சதை வளர்ச்சி ஏற்படுவதில்லை அதனால் கரு உருவாகாத நிலை, உருவான கருவும், சிதைவுறும் நிலை போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பெண்மை தாய்மை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதற்கு கல்யாண முருங்கை மரத்தின் பட்டையை கொஞ்சம் எடுத்து லேசாக இடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, பாதி நீராக சுண்டச் செய்தபின் அதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பையின் உட்புறச் சதை வளர்ச்சி மேம்படும். கருவும் உருவாகும்.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் வயிற்று வலி, உதிரப்போக்கு அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய இதன் இலை நல்ல மருந்து. வலி பறந்து போகும். இன்றைய பெண்கள் எந்த வலிக்கும், வலி மாத்திரையை பயன்படுத்துகிறார்கள். அது கர்ப்பப்பையை தளர்த்தி, சினைப்பையையும் தளர்த்திவிடும். இதனால் வீரியமிக்க கருமுட்டை உருவாகாமல் போகும். மலட்டுத்தன்மை ஏற்படும்.

இதையெல்லாம் உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் கல்யாண முருங்கையை போற்றி வளர்த்து வந்தனர். இது முழுக்க முழுக்க பெண்மையை மெருகேற்றி, தாய்மையை உருவாக்கவே வளர்க்கப்பட்டிருக்கிறது.

Related posts

பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள்  உடல் பருமன் பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள். 

nathan

பிரசவ காலத்தில் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும் முறைகள்

nathan

பெண்களுக்கு சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள்: தென்படும் அறிகுறிகள்

nathan

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள்!…

sangika

நீர்க்கட்டிகளை விரட்டினால்… வாரிசு ஓடி வரும்!

nathan

கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை….

nathan

மாதவிலக்கு வலி குறைய…

nathan