35.5 C
Chennai
Wednesday, May 28, 2025
guntur chicken fry 1621670252
Other News

சுவையான குண்டூர் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1 கிலோ

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 3-4

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

வறுத்து பொடி செய்வதற்கு…

* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 2-3

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/8 டீஸ்பூன்

* மிளகு – 1 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 2

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அதில் தயிரை ஊற்றி, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து பொடி செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, அதன் பின் துருவிய தேங்காய் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, அரை கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது சிக்கனை கிளறி விட வேண்டும். நீர் வற்றி சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, 2 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான குண்டூர் சிக்கன் வறுவல் தயார்.

Related posts

லட்சுமி மேனனுடன் திருமணமா? கண்டிப்பா நடக்கும்,விஷால் பதில்!

nathan

பூட்டானில் BOAT ரைடு சென்ற சீரியல் நடிகை நக்ஷத்ரா

nathan

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் பரபரப்பு பேட்டி – என் மீது செருப்பை கழற்றி வீசினார்

nathan

ரோட்டிலேயே புடவையை சொருகி குத்தாட்டம் போட்ட பூர்ணிமா

nathan

கருங்காலி மாலை யார் அணியலாம்?

nathan

ஆண் என்று நினைத்த கொரில்லாவுக்குக் குழந்தை

nathan

ஒரு பக்க தொடையை மொத்தமாக காட்டும் மாளவிகா மோகனன்

nathan

அவோகாடோ பயன்கள்: avocado benefits in tamil

nathan

பெட்ரோல் ஊற்றும்போது தங்கைக்கு நேர்ந்த சோகம்!!

nathan