32.2 C
Chennai
Monday, May 20, 2024
04 1430738025 7 tendercoconut
ஆரோக்கிய உணவு

உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

தினமும் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

பலரும் உடலை சுத்தப்படுத்த மேற்கொள்ளும் டயட்டானது சுவையற்றதாக இருக்க வேண்டுமென்று தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற உண்ணும் உணவில் சர்க்கரை சேர்க்காமல் இருந்தாலே போதுமானது.

இங்கு உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு அந்த உணவுப் பொருட்களை முடிந்தால் தினமும் உட்கொண்டு வாருங்கள்.

இஞ்சி

இஞ்சியின் மருத்துவ குணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும். முக்கியமாக இஞ்சியை சுடுநீரில் போட்டு காய்ச்சி, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.

பூண்டு

பூண்டு கூட உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. மேலும் பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் மற்றம் உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். எனவே தினமும் உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். மேலும் ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றை முடிந்த அளவில் தினமும் சிறிது சாப்பிட்டு வாருங்கள். இதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் சுத்தமாகி, ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நட்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.

க்ரீன் டீ

உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனால் ப்ரீ ராடிக்கல்களின் தாக்கம் குறைந்து, மூளையின் செயல்பாடு அதிகரிப்பது, கொழுப்புக்கள் கரைந்து உடல் குறைவது மற்றும் டைப்-2 நீரிழிவின் தாக்கமும் குறையும்.

எலுமிச்சை

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் சுத்தமாகும்.

இளநீர்

இளநீரில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாகவும், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லாமல் இருப்பதால், இதனை குடித்தால், உடல் சுத்தமாவதோடு, சருமமும் பொலிவு பெறும். மேலும் இளநீர் குடித்து வந்தால், செரிமானம் சீராக நடைபெறும்.

04 1430738025 7 tendercoconut

Related posts

உங்களுக்கு தெரியுமா உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….!

nathan

உங்கள் கவனத்துக்கு ஆட்டுப்பால் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க!

nathan

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் நன்மைகள்

nathan

தயிரின் அற்புதங்கள்

nathan

பழங்களின் மருத்துவ குணங்கள்

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

nathan

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்

nathan

வெறும் வயிற்றில் டீ குடிச்சா இந்த பக்கவிளைவுகள் குறி வைத்து தாக்கும்!

nathan

வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள்

nathan