32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
hariyali egg gravy 1632305470
அசைவ வகைகள்

சுவையான ஹரியாலி முட்டை கிரேவி

தேவையான பொருட்கள்:

* முட்டை – 4 (வேக வைத்தது)

* பட்டை – 1 இன்ச்

* பிரியாணி இலை – 1

* கிராம்பு – 2

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* பிரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்

ஹரியாலி மசாலாவிற்கு…

* கொத்தமல்லி – 2 கப் (நறுக்கியது)

* புதினா – 1 கப் (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

வெங்காய மசாலாவிற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பூண்டு – 4 பல்

* இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஹரியாலி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை மிக்சர் ஜாரில் போட்டு, அரை கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் சிறிய மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சேர்த்து தாளித்து, அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 4-5 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.

* பின் அதில் ஹரியாலி மசாலா மற்றும் பிரஷ் க்ரீம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டிப் போட்டு மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ஹரியாலி முட்டை கிரேவி தயார்.

Related posts

சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி

nathan

சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ்,tamil samayal kurippu,tamil samayal tips

nathan

மணமணக்கும் மதுரை மட்டன் சுக்கா

nathan

இடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்….

sangika

வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி

nathan

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

சுவையான இறால் குழம்பு

nathan