35.1 C
Chennai
Monday, Aug 31, 2026
அசைவ வகைகள்

கேரட் முட்டை ஆம்லெட்


தேவையான பொருட்கள்:

முட்டை – 3
கேரட் – 1
மிளகு – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கடலை எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• மிளகை பொடித்து கொள்ளவும்.

• முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி அதில் கேரட், உப்பு, பாதி மிளகுதூள் போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.

• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன், பாதி எண்ணெய் ஊற்றி அடித்து வைத்த முட்டைக் கலவையை பரவலாக ஊற்றி அதன் மேல் மீதி எண்ணெயை பரவலாக ஊற்றவும்.

• அடுப்பை மிதமாக எரியவிடவும்.

• கலவை தீய்ந்து போகாத அளவிற்கு வேகவிட்டு, திருப்பி போடவும்.

• இருபுறமும் நன்கு வெந்தவுடன் மேலே மீதி மிளகுதூளை தூவி கொள்ளவும்.

• விருப்பப்பட்டால் ரொட்டித்துண்டுகளில் வெண்ணைய் தடவி, துண்டுகளாக்கிய ஆம்லெட்டை இடையில் வைத்து உண்ணலாம்.

Related posts

சுவையான தந்தூரி சிக்கன்

nathan

கிரீன் சிக்கன் குழம்பு

nathan

காரைக்குடி கோழி குழம்பு செய்முறை விளக்கம்

nathan

மட்டன் ரொட்டி கறி குருமா

nathan

சுவையான முட்டை குருமா செய்வது எப்படி

nathan

வெங்காய இறால்

nathan

பட்டர் ஃபிஷ் ஃப்ரை | Butter Fish Fry

nathan

சுறா புட்டு

nathan

சுவையான சில்லி சிக்கன் செய்வது எப்படி | How To Make Chilli Chicken Recipe

nathan