cauliflower pepper fry 1600070230
Other News

காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 3/4 கப்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பூண்டு – 2 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

வறுத்து அரைப்பதற்கு…

* பட்டை – 1/4 இன்ச்

* கிராம்பு – 2

* மிளகு – 3/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* மல்லி விதைகள் – 1 டீஸ்பூன்

* வர மிளகாய் – 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு, நீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின்பு நீரை வடிகட்டி விட்டு, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, மீதமுள்ள அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெடி!

Related posts

இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப் போகுது…

nathan

மனைவி கொடுக்க வேண்டிய விஷயத்தை ஆர்த்தி கொடுக்கல- ஜெயம் ரவி காதலி

nathan

ஆண் என்று நினைத்த கொரில்லாவுக்குக் குழந்தை

nathan

இந்தியாவில் திருமணமான 13 நாளில் உயிரிழந்த மனைவி!

nathan

jaundice symptoms in tamil -மஞ்சள் காமாலை அறிகுறிகள்

nathan

கடகம் தை மாத ராசி பலன்

nathan

ஆண்களுடன் ஒரே அறையை பகிர்ந்து கொண்டேன்..

nathan

அம்மா, மகள் இருவரையும் ஒரே நேரத்தில் வேட்டையாடிய ப்ரைட் நடிகர்..!

nathan

மாடால் முட்டப்பட்டு பந்தாடப்பட்ட குழந்தை நலமாக உள்ளார்..

nathan