29.5 C
Chennai
Saturday, Jul 26, 2025
801899dc b25e 4a86 92eb 7f70d85ddc75 S secvpf
சைவம்

ஆலு பலாக் ரைஸ்

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 1 பெரியது
பசலைக்கீரை – 1 கட்டு
சாதம் – 1 கப்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு

தாளிக்க. :

பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ மொக்கு – தலா 2
சீரகம் – அரை ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்

செய்முறை :

* சாதத்தை உதிரியாக வடித்து வைக்கவும்.

* உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கி மூடி வைத்து வேக வைக்கவும். வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் பசலைக்கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.

* கீரை பாதியளவு வெந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் போட்டு மீண்டும் வதக்கவும்.

* தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* அடுத்து அதில் சாதத்தை போட்டு நன்றாக கிளறிய பின் அதில் பொரித்து வைத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழையை போட்டு மீண்டும் நன்றாக கிளறி பரிமாறவும்.

* சுவையான ஆலு பலாக் ரைஸ் ரெடி.
801899dc b25e 4a86 92eb 7f70d85ddc75 S secvpf

Related posts

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை

nathan

காலிப்ளவர் பொரியல்

nathan

சுவையான காளான் டிக்கா செய்முறை…!

nathan

மணக்கும் ஓமம் சாதம்

nathan

லோபியா (காராமணி கறி)

nathan

கத்தரிக்காய் புளிக்கூட்டு

nathan

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

nathan

பட்டாணி புலாவ்

nathan

சளி, இருமலுக்கு சிறந்த மிளகு அன்னம்

nathan