தேவையான பொருட்கள்:
பொரிப்பதற்கு…
* எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் – 500 கிராம்
* சோள மாவு – 5 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
கிரேவிக்கு…
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பட்டை – 1 சிறிய துண்டு
* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 3 (கீறியது)
* குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை – 1 டீஸ்பூன்
* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* க்ரீன் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* வினிகர் – 2 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* தக்காளி – 1 (நறுக்கியது)
* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் (நீரில் கலந்தது)
* மிளகுத் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் – அலங்கரிப்பதற்கு…
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன், சோள மாவு, சோயா சாஸ், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு 15 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை வறுத்த மீதமுள்ள எண்ணெயில் சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து குடைமிளகாய், சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
Chinese Style Pepper Chicken Recipe In Tamil
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த சிக்கன் துண்டுகள், கரைத்து வைத்துள்ள சோள மாவு நீர், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு தீயை அதிகரித்து கிளறி, உங்களுக்கு கிரேவி வேண்டுமானால் அப்படியே அடுப்பை அணைத்துவிடுங்கள். ட்ரையாக வேண்டுமானால், கெட்டியாகும் வரை கிளறி, பின் இறக்குங்கள்.
* இறுதியாக மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவி இறக்கினால், சுவையான சைனீஸ் ஸ்டைல் பெப்பர் சிக்கன் தயார்.