அழகு குறிப்புகள்

பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

பொரிப்பதற்கு…

* எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

* சிக்கன் – 500 கிராம்

* சோள மாவு – 5 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

கிரேவிக்கு…

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 சிறிய துண்டு

* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3 (கீறியது)

* குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

* க்ரீன் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

* வினிகர் – 2 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

* தக்காளி – 1 (நறுக்கியது)

* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் (நீரில் கலந்தது)

* மிளகுத் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* ஸ்பிரிங் ஆனியன் – அலங்கரிப்பதற்கு…[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]1 pepper chicken 1667056724

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன், சோள மாவு, சோயா சாஸ், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு 15 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் சிக்கனை வறுத்த மீதமுள்ள எண்ணெயில் சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து குடைமிளகாய், சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

Chinese Style Pepper Chicken Recipe In Tamil
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* பின் அதில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த சிக்கன் துண்டுகள், கரைத்து வைத்துள்ள சோள மாவு நீர், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின்பு தீயை அதிகரித்து கிளறி, உங்களுக்கு கிரேவி வேண்டுமானால் அப்படியே அடுப்பை அணைத்துவிடுங்கள். ட்ரையாக வேண்டுமானால், கெட்டியாகும் வரை கிளறி, பின் இறக்குங்கள்.

* இறுதியாக மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவி இறக்கினால், சுவையான சைனீஸ் ஸ்டைல் பெப்பர் சிக்கன் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button