25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
23 1379935647 1 egg
ஆரோக்கிய உணவு

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது முட்டை!

நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில், 17 கலோரியும், மஞ்சள் கருவில், 59 கலோரியும் உள்ளது.

நாம் சமைக்கும் முட்டையை பொருத்து, கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும். முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கு தேவையான அயோடின் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை
குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது.
முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன், நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளிசர்டைஸின் அளவும், இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது.

இத்துடன் இதயத்துக்கு பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன.

தினம் ஒரு முட்டை: தினமும் குழந்தைகளுக்கு ஒருமுட்டை கொடுப்பதன் வாயிலாக, அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கலாம். காலை உணவுடன் முட்டை வழங்குவதால், கவனிக்கும் திறன் அதிகரிப்பதாகவும், வாசிப்புத் திறன் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் எடையை, முட்டை சீராக வைத்திருக்கும். எடைக்குறைவான குழந்தைகளுக்கு, தினமும் ஒரு முட்டை கொடுத்து வந்தால், சத்துக்கள் கூடுவதோடு உடல் எடையும் அதிகரிக்கும்.

மூளை வளர்ச்சி அதிகரிக்கும்: வளரும் குழந்தைகளுக்கு, மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் வாயிலாக, குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட்ஸ், கண்பார்வையை தெளிவாக்கும்.

குழந்தை பருவத்தில் இருந்தே, தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய காட்க்ராக்ட் பிரச்னையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச்சத்து, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்புக்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது. வாரத்துக்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 45 வயதை தாண்டியவர்கள், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்டு விட்டு, மஞ்சள் கருவை தவிர்த்து விடுவது நல்லது.
23 1379935647 1 egg

Related posts

குளிர் கால உணவு முறைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பசியின்மையை போக்கும் சிறந்த உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கையாக கிடைக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

nathan

வயிற்றுப் புழுக்களை நீக்கும் அகத்திக்கீரை கூட்டு

nathan

தூதுவளைப் பூ பாயசம்

nathan

வெறும் பாதாமை இந்த மாதிரி சமைத்து தினசரி உணவாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா!!

nathan

பெண்களுக்கு மிகவும் உகந்த கருப்பு உளுந்து களி

nathan

பழங்களை சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி

nathan