தினசரி காலை பசும் கோமியத்தில் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து வாசல் மற்றும் சுவர் தரையில் தெளிக்க தொற்று நோய் அண்டாது.
மஞ்சள் தண்ணீரை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளித்தால் பூச்சிகள் வராது மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவது தடுக்கப் படும்.
அடிக்கடி சாம்பிராணி புகையை வீட்டில் போட வேண்டும். அதில் சிறிது பூண்டு தோல், வேப்பிலையை காய வைத்து போட்டு வந்தால் கொசு மற்றும் பூச்சு தொல்லை இருக்காது. நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
பாத்ரூமில் ப்ளீச்சிங் பவுடர் அடிக்கடி போடுவதால் சுத்தம் ஆவதோடு, பூச்சிகள் வருவது தடுக்கப்படும் மேலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.