chicken ketti kulambu recipe 1598343019
அசைவ வகைகள்

சிக்கன் கெட்டி குழம்பு

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/2 கிலோ

* வெங்காயம் – 1

* தக்காளி – 2

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்

* குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

* தேங்காய் – 1 கப் (துருவியது)

* சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும், அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும்.

* அடுத்ததாக கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சிறிது உப்பு தூவி கிளறி 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கினால், ருசியான சிக்கன் கெட்டி குழம்பு ரெடி!

 

Related posts

சுவையான மங்களூரியன் சிக்கன் குழம்பு

nathan

நெத்திலி மீன் தொக்கு

nathan

இது வேற லெவல்!? ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி..

nathan

சுவையான… முட்டை தொக்கு

nathan

அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

சுவையான இறால் குழம்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பாஸ்தா

nathan

சூப்பரான மட்டன் கடாய்

nathan