30.6 C
Chennai
Saturday, May 18, 2024
625.0.560.350.160.300.053.800.668 2

விளக்குகளால் ஒன்று கூடிய மக்கள்! கொரோனாவை விரட்டுவோம்… நாடே ஜொலிக்கும் அழகான புகைப்படங்கள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் இன்று விளக்குகள் மற்றும் செல்போன் லைட்களை காண்பித்து கொரோனோவை விரட்டுவோம் என்று கூறினர்.

கொரோனாவால் இந்தியாவில் தற்போது வரை 3,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 99 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இருப்பினும் பிரதமர் மோடி நோயின் தீவிரத்தை உணர்ந்து முன்னரே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அதன் பின் இந்த நோயிற்கு எதிராக போராடும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும், வகை கைதட்டி ஒலி எழுப்புங்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து சமீபத்தில், மக்கள் முன் உரையாற்றிய அவர் ஏப்ரல் 5-ஆம் திகதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனால் இன்று நாட்டின் மக்கள் அனைவரும் விளக்குகள்,டார்ச் லைட், செல்போன்கள் மூலம் லைட்களை காண்பித்து கொரோனோவை விரட்டுவோம் என்று கூறினர்.625.0.560.350.160.300.053.800.

திரைப்பிரபலங்களான ரஜினி, லாரன்ஸ் போன்றோர் தங்கள் வீட்டின் விளக்குகளை ஏற்றிய புகைப்படங்களை தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், அதன் காரணமாகவே மோடி இன்று இரவு 9 மணிக்கு விளக்குகள் ஏற்றச்சொன்னதாகவும், இதில் அறிவியல் பூர்வமாகவும், சில விஷயங்கள் இருப்பதாக கூறப்படுவதால், மோடியின் இந்த வேண்டுகோள், பெரும்பாலான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.