32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

சளித் தொல்லை, ஜீரணசக்திக்கு மூலிகைப்பொடி

இது குளிர் காலம் என்பதால் பலருக்கும் சளித்தொல்லை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பொடியை செய்து வைத்து கொள்ளலாம். இதை தினமும் சமைக்கும் போது பயன்படுத்தலாம். இந்த பொடி ஜீரணசக்தி, சளித்தொல்லை, தலைவலி, இருமல் , உடல்வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இந்த பொடி செய்ய தேவையான பொருட்கள்:

சுக்கு – ஒரு சிறிய துண்டு,
சுண்டைக்காய் வற்றல் – 10,
வேப்பம்பூ, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி,
மிளகு – 2 டீஸ்பூன்,
கடுகு – 2 டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடுகு, சுக்கு, சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயம் எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

செய்முறை: இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்தப் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடுகு சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும், சுக்கு ஜீரணசக்திக்கு நல்லது, வேப்பம்பூ பித்தத்தை தணிக்கும், கறிவேப்பிலை இரும்புச்சத்து மிகுந்தது, மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும், பெருங்காயம் வாயுத்தொல்லை நீக்கும்.

Related posts

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

nathan

ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் – அதிர்ச்சி தகவல்… !

nathan

தினமும் பல மணிநேரம் சூயிங் கம் மென்ற பெண்ணின் அவல நிலை!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் நோய்களுக்கு மருந்தாகும் மரிக்கொழுந்து…..!

nathan

ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?

nathan

மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவம்

nathan

உங்க தொடையில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

மாதவிடாய்க் கோளாறு நீக்கும் நத்தைச் சூரி! – நாட்டு வைத்தியம்

nathan

வயிறு உப்புசம் குறைக்கும் பாட்டி வைத்தியம்

nathan