11 1434006001 6 trimnosehair
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள்!

ஒவ்வொருவரும் மற்றவருடன் பழகும் போது அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை நிச்சயம் கவனிப்போம். அப்படி தான் பெண்களும் ஆண்களுடன் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்று.

ஆண்கள் நன்கு சுத்தமாக, ஹேண்ட்சம்மாக இருந்தால், பெண்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவார்கள். ஏனெனில் பெண்கள் எதிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரின் சுகாதாரம் மற்றவர்களின் முன் நல்ல மரியாதையையும் வழங்கும்.

சரி, இப்போது பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

அளவுக்கு அதிகமான பெர்ப்யூம்

உடல் முழுவதும் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் உடல் துர்நாற்றம் வீசாமல் இருக்காது. அளவுக்கு அதிகமான பெர்ப்யூம் அருகில் வருவோருக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீங்கள் பெர்ப்யூம் அடித்தால் போதும். அதிலும் காதுகளுக்கு பின், மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற இடங்களில் மட்டும் ஆண்கள் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் போதும். அதுவே அவர்கள் மீது அளவாக நல்ல நறுமணத்தை வீசும்.

கரும்புள்ளிகள்

கரும்புள்ளிகள் முகத்தில் இருந்தால், அதற்காக அவர்கள் சுகாதாரமாக இல்லை என்று அர்த்தம் இல்லை. இதற்கு ஜீன்கள் தான் காரணம். ஆனால் கரும்புள்ளிகளுக்கு தீர்வை காணாமல் இருந்தால், அதனால் முகத்தின் அழகே பாழாகும். பெண்கள் ஆண்களிடம் முதலில் ஈர்க்கப்படுவது முகத்தைப் பார்த்து

பொடுகு

சில பெண்கள் ஆண்களின் முடியால் மயங்குவார்கள். அதற்காக ஆண்களின் முடியை அடிக்கடி வருடிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உங்கள் காதலி அல்லது மனைவி உங்கள் முடியை அதிகம் தொட்டுப் பேசும் போது, தலையில் பொடுகு இருந்தால் எப்படி இருக்கும். ஆகவே தினமும் மைல்டு ஷாம்பு

உலர்ந்த உதடுகள்

உதடுகளைப் பார்த்தால் முத்தம் கொடுக்க தோன்ற வேண்டும். அதைவிட்டு உலர்ந்து காணப்பட்டால், யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே உதடுகளை எப்போதும் வறட்சியின்றி நீர்ப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வேஸ்லினை உதடுகளுக்கு தடவி வாருங்கள். முக்கியமாக

மஞ்சள்

பற்கள் காலையில் காபி குடிப்பதில் இருந்து சிகரெட் மற்றும் இதர குளிர் பானங்களைக் குடிப்பதால், முத்துப் போன்ற பற்கள் மஞ்சள் நிறத்தில் அழுகிப் போன பற்கள் போன்றாகிவிட்டன. மஞ்சள் நிறத்தில் பற்கள் இருந்தால், எந்த ஒரு பெண்ணும் அருகில் கூட ஏன் பேச கூடமாட்டாள். ஆகவே தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி துலக்குங்கள். அல்லது வேறு ஏதேனும் இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குங்கள்.

மூக்குகளில் உள்ள முடி

வயதாக ஆக உடலின் பல பகுதிகளில் தேவையற்ற முடிகள் அதிகம் வளர ஆரம்பிக்கும். ஆனால், சில ஆண்களுக்கு இளமையிலேயே மூக்குகளில் வளரும் முடியானது வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும். அப்படி மூக்குகளில் முடி நீட்டிக் கொண்டிருந்தால், அது மோசமான தோற்றத்தை வெளிக்காட்டும். ஆகவே அவ்வப்போது மூக்கில் வளரும் முடியை வெட்டிவிடுங்கள்.

11 1434006001 6 trimnosehair

Related posts

எந்த ராசிக்காரர்கள் எந்த கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் ? தெரிந்துகொள்வோமா?

nathan

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

nathan

தினமும் உலர்திராட்சை.நன்மைகளோ ஏராளம்!

nathan

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் அவரைக்காய்

nathan

‘பயனுள்ள தகவல்’.. ‘அவசியம் படிங்க’.. ‘ஆஸ்துமா நோய்க்கு சிறந்த மருந்து இதுதான்’..

nathan

முகம் எப்போதும் அழகா ஜொலிக்க வேண்டுமா? அப்ப இந்த காய்கறி ஜூஸை அடிக்கடி குடிங்க !

nathan

கிளைக்கோலிக் ஆசிட் கிரீம் பயன்பாடுகள் (Glycolic Acid Cream Uses in Tamil)

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா? கூடாதா?

nathan

பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாகும் நெல்லிக்காயின் பயன்கள்

nathan