27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ld2324
வீட்டுக்குறிப்புக்கள்

நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

பலருக்கும் அவற்றைப் போக்கி , சமையலறையை சுத்தமாக வைப்பது பெரிய விஷயமாகவே இருக்கும்.

அதுவும் Kitchen Chimney என்ற ஒன்று இருந்தால் , அதை சுத்தப்படுத்துவதே மிகப் பெரிய விஷயமாக இருக்கும்.

நாம் அனைவருமே இவற்றை அனுபவித்து இருப்போம் இல்லையா! அதற்கான டிப்ஸ் இங்கே..
**
எண்ணை சிந்திவிட்டால் துடைக்க , எண்ணைகள் வைக்கும் containerகளைத் துடைக்க , அடுப்பு , மேடை முதலியவற்றில் படியும் அழுக்குகளைத் துடைக்க , இதால் துடைத்தபின் நீரைக் கொண்டு சுத்தம் செய்து துடைக்க ஒன்று என்று பலவிதங்களில் துணிகள் தனித்தனியாக இருக்கும் .

எண்ணை எங்கே சிந்திவிட்டாலும் உடனே துடைத்து விடுவேன் .

அடுப்பின் பின்னே உள்ள tilesசில் படியும் எண்ணைக் கறைகளை, முடிந்தால் உடனே, அல்லது அன்று இரவு மொத்தமாக சுத்தம் செய்யும்போது துடைத்து விடுவேன் .

இரவில் , அடுப்பின் அடியிலும் சுத்தமாக துடைத்து விடுவேன் .

என்னிடம் உள்ள Kitchen chimney – அடுப்பின் மேலே உள்ளது – இதை நான் எந்த வகையில் தேர்ந்தெடுத்து உள்ளேன் என்றால் , அடுப்பில் எண்ணை வைத்து உபயோகிக்கும்போது (பொரியல்கள் செய்யும்போது கூட )மேலே கிளம்பும் எண்ணையானது எல்லாம் சிம்னியின் நடுவில் உள்ள ஒரு சின்ன container ரில் வந்து சேர்ந்து விடும் . ஆக , அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக இந்த எண்ணைப் பிசுக்கு சேராது .

அவ்வப்போது இந்த குட்டி containerரில் எண்ணை முழுக்க சேர்ந்தவுடன் ,இதை எடுத்து சிங்கில் கொட்டி விடுவேன் .

பின்னர் இதில் சூடான நீரை விட்டு (குக்கரில் அடியில் உள்ள நீரை கூட உபயோகப்படுத்துவேன் )அதில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் உபயோகித்து சுத்தம் செய்வேன் .

என்னிடம் உள்ள இந்த சிம்னியின் மற்ற பாகங்கள் , கழட்டி எடுக்க முடியாதவை .

ஆகவே , அவற்றையும் அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையாவது அதில் படியும் எண்ணைப் பிசுக்கை போக்கியே ஆக வேண்டும் .

இதற்கு எனக்குக் கைகொடுப்பது CIF cream .அதன் படத்தை இங்கே கொடுத்துள்ளேன் (தெரியாதவர்களுக்காக ).

முதலில் சிம்னியில் உள்ள பிசுக்கை ஒரு ஸ்பூனைக் கொண்டு வழித்து எடுத்துவிட்டு – இதிலேயே அந்தப் பிசுக்கு அதிகளவு நீங்கி விடும் , பின்னர் ஒரு துணியில் இந்த cif கிரீமை ஊற்றி , இந்த பிசுக்கின் மேல் நன்றாகத் தடவி விட்டுவிடுவேன் . பின்னர் வேறு ஒரு ஈரத்துணியைக் கொண்டு இதைத் துடைத்துவிட்டால் நன்றாக சுத்தமாகி விடுகிறது .

இதே முறையைத்தான் எந்த ஒரு இடத்தில்,அடுப்பின் மீது அல்லது பாத்திரங்களில் எண்ணைப் பிசுக்கு படிந்திருந்தாலும் , முதலில் ஸ்பூனால் அதை நீக்கிவிட்டு பின்னர் சுத்தம் செய்கிறேன் . இது மிகவும் எளிதாக இருக்கிறது .

நீங்கள் இதற்கு வேறு ஏதாவது கிரீம் அல்லது லிக்விட் யூஸ் பண்ணுவீர்களா என்றும் தெரிவித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் .
ld2324

Related posts

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

sangika

உங்களுக்கு தெரியுமா நீர்முள்ளி மூலிகையின் மருத்துவ பயன்கள்

nathan

துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! நீங்க காதலிப்பவரா! அப்போ நீங்க எந்த வகை காதலர்னு தெரிஞ்சிகங்க

nathan

தெற்கு பார்த்த வீடு நல்லதா? கெட்டதா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா பணம் கொட்டும் கை ரேகை!! 6 அறிகுறி !!

nathan

இந்த இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா டெங்கு வராது தெரியுமா!!தெரிஞ்சிக்கங்க…

nathan

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

sangika