ld39401
பெண்கள் மருத்துவம்

கடின வேலையால் கருவும் தாமதமாகும்!

பிரிக்க முடியாதது பெண்களையும் வேலையையும்… அதுதான் இப்போது அவர்களுக்குப் பிரச்னையாகி இருக்கிறது!

ஆமாம்… அதிக நேரம் வேலை செய்யும் பெண்களுக்கும், அதிக எடை தூக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் ஆய்வறிக்கை தொழில் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியானது.குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இருந்த சராசரியாக 33 வயதுள்ள ஆயிரத்து 739 பெண்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களின் வேலை நேரம், உடல் உழைப்பு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

அதன்படி, 30 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்கிறார்கள். 40 சதவிகித பெண்கள் நாளொன்றில் 5 முறைக்கும் மேல் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் வேலைகளில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 16 சதவிகிதத்தினர் ஒரு வருடத்துக்குள் கருவுறுவதில்லை. 5 சதவிகிதத்தினருக்கு 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் கருவுறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதாவது, ஒரு வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கும் 9 கிலோவுக்கு மேல் எடை தூக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். அது மட்டுமல்ல… அதிக எடையுடன் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இந்த இடைவெளி மேலும் நீள்கிறதாம்!
ld3940

Related posts

குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல் வேறு வழிகள்….

sangika

பிள்ளைபேற்றை தள்ளிப்போடாதீர்கள்

nathan

சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை தாய்ப்பால் குடிப்பதில் இருந்து நிறுத்திவிடலாம்.

nathan

கர்ப்பமடைய முயற்சி செய்யும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

nathan

கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?

nathan

சரியாக சாப்பிடாத பெண்களுக்கு வரும் மூட்டு வலி

nathan

எடைகுறைந்த குழந்தையின் உணவு முறை

nathan

ஆய்வு முடிவுகள்.!பாவாடை கட்டினால் புற்று நோயா.?

nathan

கருப்பை நீர்கட்டிகளை இல்லாது ஒழிக்க இதை செய்யுங்கள்!….

sangika