26.7 C
Chennai
Wednesday, Nov 20, 2024
coconut payasam recipe 1599042973
இனிப்பு வகைகள்

தேங்காய் பாயாசம்

தேவையான பொருட்கள்:

* பாசுமதி அரிசி அல்லது வேறு அரிசி – 1/2 கப்

* தண்ணீர் – 3 கப் அல்லது தேவையான அளவு

* வெல்லம் – 1 1/2 கப்

* தேங்காய் – 1/2 கப் (துருவியது)

* கெட்டியான தேங்காய் பால் – 2 கப்

* நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

* உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

* தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துண்டுகளாக்கப்பட்டது)

செய்முறை:

* முதலில் மிக்ஸியில் அரிசியைப் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, நீர் ஊற்றி, வெல்லம் உருகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த அரிசியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் நீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வாணலியை மூடி குறைவான தீயில் 30-35 நிமிடம் அரிசியை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

* சாதமானது நன்கு குலைந்ததும், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட், வெல்லப் பாகு சேர்த்து நன்கு கிளறி விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் 10 நிமிடம் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

* இப்போது கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.

* அதன் பின் அந்த பாயாசத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி விட வேண்டும்.

* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து, பின் அதை பாயாசத்தின் மேல் ஊற்றி கிளறினால், சுவையான தேங்காய் பாயாசம் ரெடி!

Related posts

மில்க் ரொபி.

nathan

ரவை அல்வா

nathan

சத்தான நட்ஸ் லட்டு

nathan

பிஸ்கட் சீஸ் சாட்

nathan

கோதுமை அல்வா

nathan

இனிப்பான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி

nathan

தயிர் சேமியா செய்வது எப்படி?….

sangika

பொட்டுக்கடலை உருண்டை

nathan

விளாம்பழ அல்வா

nathan