31 1509448759 2
ஆரோக்கியம் குறிப்புகள்

விரதம் இருக்கும் தருணத்தில் எதுவும் சாப்பிடக்கூடாதா?

இறைவனை நினைத்து நாள் முழுக்க அவன் நாமம் சொல்லி மனம் முழுக்க இறைவனை வியாபித்து இருக்கும் நிலையே விரதம். முக்கிய விசேஷ நாட்களில் குறிப்பாக மாதங்களில் வரக்கூடிய சதுர்த்தி, பௌர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் மேற்கொள்வது வழக்கம்.

விரதம் இருப்பவர்கள் பொதுவாக எதையும் சாப்பிடுவது இல்லை. உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக் கூடாதா?. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன?

விரதம் என்றால் என்ன?
நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறிடவும், மன நிம்மதி கிடைத்திடவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர்ந்திடவும் இறைவனை நினைத்து இருப்பது விரதம்.

இந்து சமயத்தில் விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவைச் சுருக்குதல் எனப்படுகிறது.

நோன்பு, உபவாசம் என்பவை விரதத்துடன் தொடர்புடையதாகும். இந்து மதத்தில் மட்டுமல்லாமல் கிறிஸ்துவம், இஸ்லாமிய மதத்தினரும் பல விரதங்களை கடைப்பிடிக்கின்றனர்.

விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட கடவுளை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் ஆகியவை தூய்மை அடையும் என்பது பெரியோர்கள் கூறுகின்றனர்.

விரதம் என்பதற்கு, “உரிய முறையில் வழிபாடு செய்தல்” என்பது இன்னொரு பொருள். உரிய முறையில் வழிபாடு செய்வதற்கு அகத்தூய்மை என்பது மிக முக்கியம்.

ஒருவர் உணவருந்தாமல் விரதம் இருந்து தேவையற்ற சிந்தனைகளை எண்ணத்தில் ஓடவிட்டால் அதில் எந்த பலனும் இல்லை.

விரதம் இருப்பவர்கள் அந்த ஒரு நாளைக்கு சுகபோக வாழ்க்கையை மறந்து, உணவு, உறக்கம் ஏதுமின்றி இறைவனின் நாமத்தை மட்டுமே ஜபித்துக்கொண்டு, அவரின் நினைப்பாகவே இருப்பதே மிக சிறந்த விரதம்.

என்ன சாப்பிடலாம்?
உடம்பிற்கு முடியாதவர்கள் மதிய வேளை உணவை மட்டும் அருந்திவிட்டு, காலை மற்றும் இரவு நேரங்களில் பால் பழம் சாப்பிடுவதில் தவறில்லை.

ஆனால் விரத நாட்களில் இறைவனின் எண்ணம் இல்லாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருநாள் இரவில் மட்டும் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் இருப்பது, ஒருநாள் முழுவதும் மோர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது, ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல், ஒரு நாள் முழுவதும் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது.

ஒரு நாள் முழுவதும் புழுங்கல் அரிசி வறுத்து நன்கு பொடி செய்து அதில் நெய், தேங்காய் துருவல், சர்க்கரை ஆகியவை போட்டு பிசைந்து பொரிமாவு செய்து அதை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல், ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது போன்றவை.

மேலும் விரத காலங்களில் பழங்கள் மட்டும் எடுப்பது, ஒருவேளை உணவு மட்டும் எடுப்பது, உணவில் வெங்காயம், பூண்டு என்று சேர்க்காமல் சாப்பிடுவது என விரதத்தில் பல வகைகள் உள்ளது.

ஆனால் விரதங்கள் என்பது உணவு முறையில் நிறைவடைவதில்லை.தூய்மையான உள்ளத்தில் இறைவனை முழுமையாக நிறுத்துவதில் உள்ளது. இறைவனை நேசிப்பதில் உள்ளது. இறைவனை மட்டும் நினைப்பதில் முழுமை அடைகிறது.

Related posts

இந்த தவறுகளை செய்யாதீங்க.. என்ன செஞ்சாலும் உடல் எடை குறையலையா?

nathan

கூந்தலுக்கு கெடுதலை உண்டாக்கும் ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள்

nathan

நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!இத படிங்க!

nathan

துளசியில் ஒளிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… ஏசியால் ஏற்படும் சரும வறட்சியை போக்க வேண்டுமா?

nathan

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வேண்டுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

மிளகு தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…பழங்கள் உடல் எடையை அதிகரிக்குமா..?

nathan

காலையில எப்ப பார்த்தாலும் ரொம்ப சோர்வா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan