நம் உடலுக்கு அடிப்படையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் தேவை. குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு மற்றும் புரதம். கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள். பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அவசியம். அவை அனைத்தையும் சரியான விகிதத்தில் உட்கொள்வதன் மூலம் தேவையற்ற கலோரி உட்கொள்ளலைக் குறைத்து எடையைக் கட்டுப்படுத்தலாம்.
வெஜிடேரியன் டயட் – முதல் நாள்
காலை உணவாக – ஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சியுடன் சிறிது நட்ஸ் வகைகள் எடுத்துக் கொள்ளலாம்.
மதிய உணவு – ஒரு சப்பாத்தி, அரை கப் பருப்பு, அரை கப் கேரட் பட்டாணி பொரியல் (அல்லது) பனீர் கிரேவி
இரவு உணவாக – ஒரு ரொட்டி, பருப்பு சுரைக்காய் கூட்டு
ஸ்நாக்ஸ் நேரங்களில் – வெள்ளரிக்காய் டீடாக்ஸ் வாட்டர் ஒரு கிளாஸ் (அ) ஏதாவது ஒரு சீசன் பழம் (அ) மோர் ஒரு கிளாஸ் (அ) சர்க்கரை சேர்க்காத டீ
இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
வெஜிடேரியன் டயட் – இரண்டாம் நாள்
காலை உணவு – காய்கறிகள் சேர்த்து செய்த ரொட்டி 1, ஒரு கப் தயிர்
மதிய உணவு – வெந்தயக் கீரை, அரை கப் சாதம், பயறு வகைகளில் செய்த கிரேவி,
இரவு உணவு – பனீர் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கியது ஒரு சிறிய கப், 1 ரொட்டி, சிறிது புதினா சட்னி
ஸ்நாக்ஸ் – வெள்ளரிக்காய் டீடாக்ஸ் நீர் – 1 கிளாஸ், ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் – 100 கிராம், சீசன் பழங்கள் ஏதாவது இரண்டு, மோர் ஒரு கிளாஸ் – ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெஜிடேரியன் டயட் – மூன்றாம் நாள்
காலை உணவு – ஒரு கிளாஸ் மோர், சியா விதை சேர்த்த கோதுமை ரொட்டி டோஸ்ம் செய்தது. கால் கப் கொண்டைக்கடலை
மதிய உணவு – வெந்தயக் கீரை, அரை கப் சாதம், பயறு வகைகளில் செய்த கிரேவி,
இரவு உணவு – பனீர் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கியது ஒரு சிறிய கப், 1 ரொட்டி, சிறிது புதினா சட்னி
ஸ்நாக்ஸ் – வெள்ளரிக்காய் டீடாக்ஸ் நீர் – 1 கிளாஸ், ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் – 100 கிராம், சீசன் பழங்கள் ஏதாவது இரண்டு, மோர் ஒரு கிளாஸ் – ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெஜிடேரியன் டயட் – நான்காம் நாள்
காலை உணவு – பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்த ஸ்மூத்தி ஒரு கிளாஸ், கடலைமாவு அல்லது முட்டை சேர்த்த வெஜ் ஆம்லெட் 1
மதிய உணவு – பாசிப்பயறு கடையல் ஒரு பௌல், வெண்டைக்காய் மசாலா ஒரு கப், ஒரு ரொட்டி
இரவு உணவு – பாலக் கீரை கூட்டு ஒரு கப், அரிசி சாதம் அரை கப்
ஸ்நாக்ஸ் – வெள்ளரிக்காய் டீடாக்ஸ் வாட்டர் ஒரு கிளாஸ் (அ) ஆரஞ்சு 1 (அ) மோர் ஒரு கிளாஸ் (அ) வெஜிடபிள் சாலட் ஒரு கப்
வெஜிடேரியன் டயட் – ஐந்தாம் நாள்
காலை உணவு – ஸ்கிம்டு மில்க் 1 கிளாஸ், பட்டாணி சேர்த்த அவல் உப்புமா ஒரு கப்
மதிய உணவு – குறைந்த கொழுப்புள்ள பாலில் செய்த பனீர் கிரேவி (அரை கப்), ஒரு முழுதானிய மாவில் செய்த ரொட்டி
இரவு உணவு – ஒன்றரை கப் தயிர், தக்காளி கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சேர்த்து செய்த மசாலா அரை கப், ஒரு ரொட்டி
ஸ்நாக்ஸ் – வெள்ளரிக்காய் டீடாக்ஸ் வாட்டர் ஒரு கிளாஸ் (அ) ஸ்கிம்டு பனீர் 100 கிராம் (அ) வெஜிடபிள் சாலட் ஒரு கப் (அ) சர்க்கரை சேர்க்காத டீ ஒரு கப்
வெஜிடேரியன் டயட் – ஆறாம் நாள்
காலை உணவு – 2 இட்லி, நிறைய காய்கறிகள் மற்றும் பருப்பு சேர்த்த சாம்பார் ஒரு கப்
மதிய உணவு – தயிர் ஒன்றரை கப், தக்காளி கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சேர்த்து செய்த மசாலா அரை கப், ஒரு ரொட்டி
இரவு உணவு – வேகவைத்த பாசிப்பயறு ஒரு கப், வெண்டைக்காய் மசாலா அரை கப், 1 ரொட்டி
ஸ்நாக்ஸ் – வெள்ளரிக்காய் டீடாக்ஸ் வாட்டர் ஒரு கிளாஸ் (அ) ஸ்கிம்டு பனீர் 100 கிராம் (அ) வெஜிடபிள் சாலட் ஒரு கப் (அ) சர்க்கரை சேர்க்காத காபி ஒரு கப்
வெஜிடேரியன் டயட் – ஏழாம் நாள்
காலை உணவு – கடலைமாவு பராத்தா, பூண்டு சட்னி – 3 சட்னி
மதிய உணவு – பாலக் கீரை கூட்டு, ஒரு கப் சாதம்,
இரவு உணவு – குறைந்த கொழுப்புள்ள பனீர், ரொட்டி 1
ஸ்நாக்ஸ் – வெள்ளரிக்காய் டீடாக்ஸ் வாட்டர் ஒரு கிளாஸ் (அ) ஸ்கிம்டு பனீர் 100 கிராம் (அ) ஆப்பிள் 1, ஸ்கிம்டு மில்க் 1 கிளாஸ்