Beauty Tips jpg 921
எடை குறைய

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்..!

பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள். எப்படியாவது தங்கள் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. அந்த சுருக்கத்தைப் போக்க பின்பு, அழகு சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதைவிட சிறந்தது தேவையான உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும். இவைகளை தொடர்ந்து இளம்பெண்கள் கடைபிடித்தால் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. கவர்ச்சியான அழகையும் தக்கவைத்துக் கொள்ளலாம்.

உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைந்து முகம், கழுத்து, கைவிரல் பகுதிகளில் சுருக்கம் தோன்றும். முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை “டைட்னிங் பேஷியல்” செய்ய வேண்டும். டைட்னிங் பேக்குகளும், டைட்னிங் மாஸ்க்குகளும் சரும சுருக்கங்களைப் போக்க உதவுகின்றன.

சருமத்தின் அழகைப் பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை. முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு தினமும் பத்து டம்ளர் தண்­ணீரும் குடித்தால் சருமம் வறண்டு சுருக்கம் தோன்றுவது தவிர்க்கப்படும். கன்னங்கள் உள் அமுங்கி காணப்பட்டால் தினமும் பத்து நிமிடங்கள் வாய் நிறைய தண்­ணீரை வைத்து கொப்பளிக்கும் பயிற்சியை மேற்கொண்டால் போதும்.

உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கரு, முல்தானிமிட்டி, தேன் மூன்றையும் கலந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தினாலே போதும்.
Beauty%20Tips jpg 921

Related posts

உடல் எடையை குறைக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

nathan

எடையைக் குறைக்க ஓர் எழிய வழி

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவமே போதுங்க!!!

nathan

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் திரவ டயட்!! இதப் பத்தி தெரிஞ்சுக்கோங்க!!

nathan

மீண்டும் ஏற்படும் கொழுப்பை நீக்க 5 சுலபமான வழிகள்

nathan

உடல் எடை குறைக்க கரும்பு ஜூஸ் – கரும்பு சாறு சித்த மருத்துவ நன்மைகள்!!

nathan

எப்படி உடல் எடையை குறைப்பது? இதோ அதற்கான வழிமுறைகள்

nathan

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க

nathan