Remedies For Fat Burn
எடை குறைய

வேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!!

எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். பொதுவாக நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க

முயலும் போது, அதன் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதற்கு சற்று பொறுமைக் காக்க வேண்டும். நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…! இங்கு உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், உடல் எடை கணிசமாக குறைவதை நீங்களே காணலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில்
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

பூண்டு பால்
4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.

மாட்டுப் பால்
தினமும் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் தேன் கலந்து குடித்து வர, உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

புடலங்காய்
புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் புடலங்காய் பொரியல் செய்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்

கேரட் மற்றும் மோர்
தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வர, உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

பப்பாளிக் காய்
பப்பாளிக் காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, அதுவும் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

மிளகுத் தூள்
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது காய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் செய்து குடிப்பது நல்லது. அப்படி சூப் செய்து குடிக்கும் போது, அதில் மிளகுத் தூளை சேர்த்து குடித்து வர, அதனால் சூப்பின் மணமும், சுவையும் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களும் கரையும்.

சூப் உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், 2-3 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி சூப் செய்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்படும்.

துளசி பானம்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் துளசியை பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

எலுமிச்சை மற்றும் தேன்
இது அனைவருக்கும் தெரிந்த ஓர் வழி தான். அது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்

தக்காளி
3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் ஒரு தக்காளியை சாப்பிட்டு வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டுன் இருப்பதோடு, கொழுப்புக்கள் குறைந்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

கறிவேப்பிலை
3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்ல் 10-12 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர, நீங்கள் எதிர்பாராத அளவில் உங்களின் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

இஞ்சி சாறு
இஞ்சி சாறு உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். எனவே இஞ்சி சாற்றினை அன்றாடம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Remedies For Fat Burn

Related posts

டயட்

nathan

30 வயதை கடந்த பெண்களின் உடல் எடையை குறைக்கும் பயிற்சி

nathan

எடை குறைக்கும் இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ்

nathan

கிரீன் டீ குடித்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்திடலாம்

nathan

குறைந்த நாட்களிலேயே உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? கண்டிப்பா இத படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு ஜூஸ் குடித்தால் போதும்

nathan

அழகான உடலமைப்பை பெறவேண்டுமா?azhagu kuripugal

nathan

உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும்!…

sangika

பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான்

nathan