என்னென்ன தேவை?
புளித் தண்ணீர் – 2 கப்,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
சாம்பார் தூள்- 3 டீஸ்பூன்,
அப்பளம் – 2,
வெல்லம் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க…
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1/4 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 2,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அப்பளத்தை பொரித்து உடைத்து கொள்ளவும். அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுத்து அதனுடன் சாம்பார் தூள், உப்பு, வெல்லம் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு வறுக்கவும். இதனுடன் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன், உடைத்த அப்பளம் சேர்த்து இறக்கவும்.