31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

சப்பாத்தி உப்புமா

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 4,
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

* கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

* நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம்.

Related posts

சூப்பரான சைடு டிஷ் கார்ன் மஷ்ரூம் மசாலா

nathan

கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு

nathan

உருளைக்கிழங்கு சாம்பார்

nathan

கொத்தமல்லி சாதம் tamil recipes

nathan

அப்பளக் குழம்பு

nathan

கடலை கறி,

nathan

சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் குருமா

nathan

கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

பச்சைப்பயறு வறுவல்

nathan