31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சுவையான குடைமிளகாய் மசாலா

குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இந்த காய்கறியை உங்கள் உணவில் அடிக்கடி சேர்ப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவும். குடைமிளகாய் கொண்டு பல சமையல் வகைகள் செய்யலாம். அதில் ஒன்று சில்லி மசாலா. இந்த மிளகாய் மசாலா சாதம் மட்டுமின்றி, சப்பாத்தி, பர்கா, பூரி போன்றவற்றுக்கும் நன்றாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

 

தேவையான பொருட்கள்:

* பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

* இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 4-5 (பொடியாக நறுக்கியது)

* துருவிய தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன்

* வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

* வெள்ளை எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* வேர்க்கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* புளி – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

பிற பொருட்கள்….

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* தக்காளி – 1 (நறுக்கியது)

* குடைமிளகாய் – 4-5 (நீள நீளமாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – சிறிது

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1 கப்

* வெல்லம் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, மல்லி மற்றும் கசகசா சேர்த்து குறைவான தீயில் 3-4 நிமிடம் வறுக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால், வெங்காயம் சீக்கிரம் வெந்துவிடும்.

* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 7-8 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் புளியையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் குடைமிளகாயை சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் ஒரு கப் நீர் ஊற்றி கிளறி, வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, கரம் மசாலா பொடியைத் தூவி குறைவான தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் மசாலா தயார்.

Related posts

செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் என்ன நன்மைகள்…

nathan

ஆண்கள் அப்பாவாக உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எச்சரிக்கை இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க…

nathan

அவசியம் படிக்கவும் ! அன்றாட உணவில் கருப்பு உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…?

nathan

இந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாதாம்!…

sangika

karuveppilai benefits in tamil – கருவேப்பிலை பயன்கள்

nathan

தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், உடலில் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் சீரகத் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மையா..?

nathan