34.5 C
Chennai
Friday, Jul 26, 2024
idli po
சமையல் குறிப்புகள்

செட்டிநாடு இட்லி பொடி

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1/2 கப்

* கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 10

* எள்ளு விதைகள் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, எள்ளு விதைகள், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், செட்டிநாடு இட்லி பொடி தயார். இந்த இட்லி பொடியை நல்லெண்ணெயுடன் தேவையான போது சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

குறிப்பு:

* உங்களுக்கு இட்லி பொடி காரமாக வேண்டுமானால், வரமிளகாயை இன்னும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

* உங்களுக்கு கடலை பருப்பு சேர்க்க விருப்பமில்லாவிட்டால், அதை தவிர்த்துக் கொள்ளலாம்.

* பெருங்காயத் தூள் மற்றும் எள்ளு விதைகள் இரண்டையும் எப்போதும் நல்ல தரமானதாகவே பயன்படுத்த வேண்டும். அது தான் நல்ல ப்ளேவரையும், மணத்தையும் தரும்.

Related posts

சுவையான வரகு சாமை சர்க்கரை பொங்கல்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கோதுமை மாவு கருப்பட்டி தோசை செய்வது எப்படி?

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

கெட்டுப்போன பாலை வீசிடாதீங்க…! சுவையான கேக் செய்யலாம்…

nathan

சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் வெங்காயத் துவையல்….

sangika

மெத்தி சிக்கன் குழம்பு

nathan

சுவையான வாழைப்பூ வடை

nathan

சுவையான காளான் பொரியல்

nathan

சுவையான பிரெட் பிரியாணி – செய்வது எப்படி?

nathan