கிளின்சர் பயன்படுத்தவும்
பெரும்பாலும் முகத்தைக் கழுவ ஆண்கள் சோப்பை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமானால் சருமத்திற்கு ஏற்ற நல்ல கிளின்சரை வாங்கி தினமும் 3 முறை முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுவும் ஆண்கள் கற்றாழை அல்லது க்ரீன் டீ அடங்கிய கிளின்சரை பயன்படுத்துவது இன்னமும் நல்லது.
டோனர் பயன்படுத்தவும்
பலருக்கும் டோனர் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி தெரியவில்லை. ஆனால் இது சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த டோனரை முகத்தைக் கழுவிய பின்னர் பயன்படுத்த வேண்டும். அதுவும் இதற்கு நல்ல டோனர் அல்லது டோஸ் வாட்டரைப் பயன்படுத்த வேண்டும். கோடைக்காலத்தில் சருமத்தை அழகாக பராமரிக்க ஒரு நல்ல டோனர் மிகவும் அவசியம்.
ஸ்கரப் மற்றும் ஃபேஸ் மாஸ்க்
ஆண்கள் வாரத்திற்கு ஒருமுறை சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதனால் சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும் மற்றும் சருமத்துளைகளின் அளவு குறையும். அதற்கு முகத்திற்கு கெமிக்கல் கலந்த ஸ்கரப்புகளைப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே ஸ்கரப் தயாரித்துப் பயன்படுத்தலாம். ஆனால் எந்த ஒரு பொருளை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பும், கையின் ஓரத்தில் சோதனை செய்து பார்த்துக் கொள்ள மறவாதீர்கள். இது தவிர, வாரத்திற்கு ஒருமுறை முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.
ஷேவிங்கிற்கு பிந்தைய ஸ்ப்ரே/லோஷன்
பெரும்பாலான ஆண்களுக்கு ஷேவிங் செய்யும் பழக்கம் இருக்கும். ஷேவிங் செய்வதால் சருமம் அதிகம் சேதமடையும். எனவே ஷேவிங் செய்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆண்களின் முகச் சருமம் மென்மையாக இருக்க ஷேவிங் செய்த பின் பயன்படுத்தும் ஸ்ப்ரே அல்லது லோஷனைப் பயன்படுத்த வேண்டும்.
சன்ஸ்க்ரீன்
சூரிய கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்களும் சன்ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுவும் இந்த சன்ஸ்க்ரீனை கைகளில் மட்டுமின்றி, முகம், கழுத்து, கால் போன்ற பகுதிகளிலும் தடவ வேண்டும். முக்கியமாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்தும் போது, அது சருமத்தினுள் நுழையும் அளவில் நன்கு மென்மையாக சருமத்தில் வெள்ளை படலம் இல்லாதவாறு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.