30.1 C
Chennai
Thursday, May 29, 2025
22 62beb
Other News

தோசை இட்லி ஏற்ற சுவையான வடகறி

தேவையான பொருட்கள்
கல்லை பருப்பு 200கிராம் பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் காஞ்ச மிளகாய் 5 சோம்பு அரை டீஸ்பூன்

செய்முறை விளக்கம்
முதலில் வடைக்கு தேவையான கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கடலைப் பருப்பு நன்கு ஊறியதும் தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.

அதோடு பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சோம்பு, தட்டிய இஞ்சி, கருவேப்பிலை பின்னர் அதற்கு தேவையான உப்பு கலந்து ஒன்றும் இரண்டுமாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வடை சாப்பிடும் பொழுது ஆங்காங்கே பருப்புகள் தட்டுபட வேண்டும், எனவே ரொம்ப நைசாக அரைக்க கூடாது. அரைத்து எடுத்த மாவுடன், ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சிறு சிறு உருண்டைகளாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

தோசை இட்லி ஏற்ற சுவையான வடகறி – வீட்டிலேயே செய்வது எப்படி? | Vadacurry Recipe In Tamil

அனைத்து வடைகளையும் பொரித்து எடுத்த பின், சூடு ஆறிய பின்பு அதனை உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவலுடன், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து

தாளிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். சோம்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை தாளித்தம் செய்து, ஒரு கொத்து கறிவேப்பிலை, இடித்த இஞ்சி, நசுக்கிய பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பலரும் வேண்டாமென ஒதுக்கும் பொன்னாங்கண்ணி கீரையில் இத்தனை பயன்களா? இவற்றை பச்சை வாசம் போக வதங்கியபின் ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி மசிய வதங்கிய பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்தோடு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மசாலா வாசம் போக கொதிக்க விடுங்கள்.

அதன் பிறகு உதிர்த்து வைத்துள்ள வடைகளை பாதி அளவிற்கு சேர்த்து வதக்க வேண்டும். மீதி வடைகளை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம். நீர் சுண்ட வதக்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்ற வேண்டும்.

தேவையான அளவிற்கு தண்ணீரை ஜாரில் ஊற்றி கழுவி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு தண்ணீர் சுண்டி வடகறி கெட்டியான பதத்திற்கு வருகிறதோ, அந்த அளவிற்கு வடகறியின் சுவை அதிகரிக்கும்.

கிரேவி பதத்திற்கு சுண்டி எண்ணெய் தெளிய மேலே பிரிந்து வந்ததும், உதிர்த்து வைத்துள்ள மீதி வடைகளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி சுட சுட இறக்கிப் பரிமாற வேண்டியது தான்.

Related posts

விஜயகாந்த் பிறந்தநாளுக்கு அவரை நேரில் சந்தித்த முன்னாள் நண்பர்கள்

nathan

கார்த்திகை நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்

nathan

பிரபல நடிகை தவறான முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

nathan

பிரபல துணை நடிகர் திடீர் மரணம்…

nathan

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்… நடந்தது என்ன?

nathan

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

nathan

மிரட்டும் AI – வெறும் 48 மணி நேரத்தில் கேன்சருக்கு தடுப்பூசி

nathan

குழந்தை அழுவதை நிறுத்த பால் பாட்டிலில் மதுவை ஊற்றிக் கொடுத்த தாய்…

nathan

பெட்ரூமில் இருந்தபடி ரீல்ஸ்

nathan