Other News

தெரிஞ்சிக்கங்க…பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் தீய பழக்கங்கள்!

ஒரு குழந்தைக்கு தன் பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள். குழந்தைகள் தங்களை அறியாமலேயே தங்களது பெற்றோர்களை தான் தங்களது ரோல் மாடல்களாக ஏற்றுக்கொண்டு அவர்களை போலவே நடக்கிறார்கள்.

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுப்பவரா நீங்கள்? அதனால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?

‘தாயை போல பிள்ளை நூலை போல சேலை’ என்ற பழமொழிக்கு ஏற்ப பெற்றோர்களை போல தான் பிள்ளைகள் இருப்பார்கள். குழந்தைகள் சில கெட்ட விஷயங்களை தங்களது பெற்றோர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள் அவை என்னவென்று பார்ப்போம்.

1. முக பாவனைகள்

நீங்கள் ஒருவர் மீது கோவமாக இருக்கும் போது அல்லது ஒருவரை பிடிக்காதது போல காட்டும் முகபாவனைகளை உங்கள் பிள்ளைகள் அப்படியே காப்பி அடித்துவிடுவார்கள். இதை சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம்.

2. செல்போன் பழக்கம்

இன்றைய மாறி வரும் சூழலில் செல்போன் இல்லாமல், இண்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது போல நாம் மாறிவிட்டோம். அதிகநேரம் செல்போனில் மூழ்கி இருப்பது தவறு என தெரிந்தும் அதை செய்வோம். செல்போனுக்கு அடிமையாகும் பழக்கத்தை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்.

3. விதிமுறைகளை மீறும் பழக்கம்

பொதுவாக நம்மில் பலர் விதிமுறைகளை மதித்து நடப்பதே கிடையாது. ஒரு சினிமாவிற்கு சென்றால், வெளியில் வாங்கிய திண்பண்டங்களை உள்ளே கொண்டு வர கூடாது என்று சொல்வார்கள் அவ்வாறு இருந்தும் மறைத்து வைத்து எடுத்து செல்வோம். இது உங்களுக்கு ஒரு மாபெரும் வெற்றியாக தெரியலாம். ஆனால் நாளை உங்கள் குழந்தை இதை விட பெரிய விதிமுறை மீறல் குற்றங்களை செய்யும்.

4. சாக்கு சொல்லுதல்

நாம் என்ன பேசுகிறோம் என்பதை எப்போதும் நமது குழந்தைகள் கேட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். நமக்கு தான் அது தெரியாது. போனில் பேசும் போது, எனக்கு நிறைய வேலை இருக்கு வர முடியாது, நாங்க வெளிய போறோம் அதனால வர முடியாது என பொய்யான காரணங்களை சொல்லி ஒரு விஷயத்தை தவிர்ப்பதை குழந்தைகள் கவனித்து அதன்படி நடப்பார்கள்.

5. தவறான வார்த்தைகள்

பெற்றோர்களுக்குள் சண்டை வரும் போது தீய சொற்களை பயன்படுத்துவது, அல்லது வெளியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், தவறான சொற்களால் திட்டுவது போன்றவற்றை குழந்தைகள் கண்காணித்து தீய வார்த்தைகளை கற்றுகொண்டு பேச தொடங்கிவிடுவார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

6. திருடுதல்

நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் அல்லது உறவினர் வீட்டில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு வருவதில் அலாதியான சந்தோஷம் காணுவீர்கள். இதனால் நாளை உங்கள் பிள்ளை பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களிடம் இருந்து பென்சில், பேனா போன்றவற்றை திருடிக்கொண்டு வரும்.

7. டிவியை பார்த்து திட்டுவது

ஒரு நடிகர் நன்றாக நடிக்கவில்லை என்றாலோ அல்லது விளையாட்டு வீரர் நன்றாக விளையாடவில்லை என்றாலோ டிவியை பார்த்துக்கொண்டு அவரை நாம் திட்டுக்கொண்டு இருப்போம். இது தவறானது. எதையும் மற்றவரது நிலையில் இருந்து யோசித்து பார்க்க வேண்டும். இதை எல்லாம் உங்கள் குழந்தை பார்த்தால், மற்ற துறையினரை தாழ்த்தி மதிப்பிட தொடங்கிவிடும்.

8. மற்றவர்களை பற்றி தவறாக பேசுதல்

சிலர் கிசுகிசு பேசிகிறேன் என்ற பெயரில் அக்கம் பக்கத்தினரை பற்றி இல்லாததை எல்லாம் பேசிக்கொண்டு இருப்பார்கள். இது பெற்றோர்கள் பிள்ளைக்களுக்கு கற்பிக்கும் தீய பாடமாகும்.

9. சாலை பயணம்

நீங்கள் சாலை விதிகளை உங்கள் குழந்தைகள் முன்பாவது மீறாமல் இருக்க வேண்டும். சாலையில் யாராவது அடிபட்டு இருந்தால் அவருக்கு உதவி செய்யாமல் நமக்கு என்ன என்று போவது கூடாது.

10. ஏமாற்றுவது!

வெளியில் அல்லது கடைகளுக்கு செல்லும் போது குறைவாக பணம் கொடுப்பது, மறதியாக கடைக்காரர் அதிக பணத்தை சில்லறையாக கொடுத்துவிட்டால், அதை தெரிந்தே வாங்கிக்கொண்டு வந்துவிடுவது போன்ற காரியங்களை தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டாம்.

இது போன்று ஏதாவது தீய பழங்கங்கள் இருந்தால், உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காகவாவது மாற்றிக்கொள்ளுங்கள். முடிந்தவரை நல்ல பழங்களை சொல்லி தர முடியாவிட்டாலும், தீய பழக்கங்களை கற்பிக்க வேண்டாமே..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button