201607140843198680 Expressing headache symptoms SECVPF
மருத்துவ குறிப்பு

தலைவலி உங்களை வாட்டி வதைக்குதா? இதோ சில எளிய வைத்தியங்கள்

தலையின் இரத்த நாளங்களில் ஒழுங்கற்ற இரத்த ஓட்டம் காரணமாக தலைவலி ஏற்படுகிறது.

தினசரி வேலை மற்றும் மன அழுத்தம் காரணமாக உடல் வலி மற்றும் தலைவலி ஏற்படலாம்.

இது நம்மை மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளிவிடும். சிலருக்கு டென்ஷன் ஆனாலே தலைவலி வந்து விடும்…

இதனை போக்க கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை வழிகளே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தலைவலி உங்களை வாட்டி வதைக்குதா? இதனை சட்டென போக்க இதோ சில எளிய வைத்தியங்கள்

கிராம்பை நன்கு அரைத்து பசை போல் மாற்றி அதை லேசாக சூடேற்றி பின் வலியுள்ள நெற்றியில் தடவினால் தலைவலி உடனே குணமாகும். கல் உப்பிற்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் உள்ளது. மேலும் சிறிது கிராம்பு சிறிது கல் உப்பை பால் கலந்து அரைத்து சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

30 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து பின் அதை வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குணமாகும்.

குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பசையாக்கி நெற்றியில் தடவினால் தலைவலி மறையும். வெற்றிலையை இதமாக சூடேற்றி நெற்றியில் சிறிது நேரம் வைத்தால் தலைவலி குணமாகும்

பட்டையினை பொடியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கொள்ள வேண்டும், பின்பு நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

1-2 இஞ்சியை எடுத்து கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட தலைவலியை வராமல் தடுக்கலாம்.

சிறிது எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து அருந்தினால் தலைவலி குணமாகும், இந்த சாறு வாயு உற்பத்தியை குறைத்து தலைவலியை சரி செய்கிறது.

யூகலிப்டஸ் தைலம் தலைவலிக்கு நல்ல மருந்து ஆகும், இதனைக் கொண்டு மாசாஜ் செய்தால் தலைவலிக்கு உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.

தலைவலி இருக்கும் போது கொஞ்சம் சூடான பால் குடித்தால் தலைவலி விரைவாக குறையும். சாப்பாட்டில் கொஞ்சம் நெய் சேர்த்து உண்டாலும் தலைவலி குறையும்.

சந்தனத்தை சிறிது தண்ணீர் விட்டு மைபோல மென்மையாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி சரியாகும்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! தைராய்டு பிரச்சனை இருக்குதா? அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க…

nathan

வெறும் உப்பைக் கொண்டு ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி? இதை படிங்க…

nathan

பச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்?தெரிந்துகொள்வோமா?

nathan

புதிய தாய்களுக்கான டிப்ஸ்! பச்சிளங்குழந்தையை பராமரிப்பது எப்படி?

nathan

பித்தப்பை கல்லை அகற்ற புதிய சிகிச்சை

nathan

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…தெரிஞ்சிக்கங்க…

nathan

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

sangika

ஆண்மைக் குறைவு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருத்துவம்

nathan

வல்லாரை வல்லமை

nathan