30.4 C
Chennai
Tuesday, Sep 2, 2025
8 tomato rice
ஆரோக்கிய உணவு

சுவையான வரகரிசி தக்காளி சாதம்

பண்டைய மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்றிற்கு வரவேற்கிறோம். இன்று பலருக்கு இது பற்றி தெரியாது. இந்த வரகரிசி பொதுவாக எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதில் பல சத்துக்கள் உள்ளன.

இதை எப்படி செய்வது என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. இந்த சாதத்தை வைத்து தக்காளி சாதம் செய்யலாம் என்றால் வேண்டாம் என்று சொல்வீர்கள். இந்த வரகரிசி தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:
வரகரிசி – 1/2 கப்
தக்காளி – 2 (அரைத்தது)
வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…
கடுகு – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 1
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் வரகரிசியை 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்ததாக, குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

அத்துடன் தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வரகரிசி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கினால் சுவையான வரகரிசி தக்காளி சாதம் ரெடி….

Related posts

தெரிஞ்சிக்கங்க…பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும்!

nathan

சுவையான மாதுளை மில்க்ஷேக்

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்தான சமையல்

nathan

அடேங்கப்பா! இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுங்க..! உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?

nathan

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

antioxidant benefits in tamil – ஆன்டி-ஆக்ஸிடெண்ட்

nathan

ஆரோக்கியத்தைத் தரும் கொத்தமல்லி தோசை

nathan