28.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
pregnancy
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா?பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதாவது காய்ச்சல், தலைவலி, வாந்தி, கை கால் வலி, இடுப்பு வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். எல்லா பிரச்சனைகளுக்கும் மருத்துவரிடம் அடிக்கடி செல்ல முடியாது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் போது நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்றாக வேண்டும்.

கர்ப்பகாலத்தின் போது உடல் அளவிலும் மனதளவிலும் பிரச்சனைகள் வருவது உண்டு. உங்கள் உடலில் பல மாற்றங்களை நீங்கள் உணருவீர்கள். ஆனால் இந்த மாற்றங்களை கண்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. இவை கர்ப்ப காலத்தின் போது எல்லா பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் தான். மேலும் எந்த பிரச்சனைகள் வரும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

வாந்தி

பல பெண்களின் பொதுவான பிரச்னை காலை எழுந்தவுடன் வாந்தி எடுப்பது தான். இது எல்லா பெண்களுக்கும் ஏற்படும் இயல்பான ஒன்றாகும். மேலும் எந்த தண்ணீர் ஆதாரமும் உங்கள் வயிற்றில் தங்கவில்லையென்றாலும், சிறுநீர் கழிக்கவில்லையென்றாலும் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் மருத்துவரிடம் செல்லுவது நல்லது. நீங்கள் தொடர்ந்து வாந்தி எடுக்கும் போது ஹைபரெமஸிஸ் கிராவிடாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளர்கள் என்று அர்த்தம். அதாவது இந்த நோய் ஏற்படும் போது உங்கள் கர்ப்பத்திற்கு ஆபத்து ஏற்படும் மேலும் உங்களின் எடை குறைய வாய்ப்புள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மேல் உங்களால் எந்த உணவையும் உண்ண முடியவில்லையெனில் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

 

அடிவயிற்று வலி

உங்கள் கர்ப்ப காலத்தின் 12 வாரங்களுக்கு முன்பு வரை அடிவயிற்றின் ஒரு பக்கமாக வலி இருப்பது கருப்பையில் கரு உருவதற்க்கான ஒரு செலயாகும். ஆனால் அதற்கு பிறகும் உங்களுக்கு அடிவயிற்றில் வலி மிக கடுமையாக இருந்தாலோ அல்லது மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டால் குடல் அழற்சி அல்லது வயிற்றில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

பனிக்குடம் உடைதல்

கர்ப்ப காலத்தின் இறுதி கட்டத்தில் நீங்கள் இருக்கும் போது நீர் வெளியேறினால் இது உங்கள் பனிக்குடம் உடைந்ததற்கான அறிகுறியாகும். எனவே உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்லுங்கள். ஆனால் 37 வாரங்களுக்கு முன்பு நீர் வெளியேறினால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள். குறை பிரசவம் என்று நினைத்து நீங்கள் பயப்படத் தேவையில்லை, உங்கள் குழந்தைகள் உங்கள் சிறுநீர் பையை உதைத்து இருந்தால் கூட இப்படி நடக்க வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்து முடிவு எடுங்கள்.

இரத்தப்போக்கு

உங்களுக்கு எப்போது இரத்தப்போக்கு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். உங்கள் முதல் 3 காலங்களில் இரத்தப்போக்கு ஏற்படுவது சாதாரணமான விஷயம் தான். இதற்காக பயப்படத் தேவையில்லை. எல்லா இரத்தப்போக்கும் கருச்சிதைவுக்கான காரணங்கள் இல்லை எனவே நீங்களாக உங்கள் மனதை குழப்பிக்கொள்ள அவசியமில்லை. இரத்தப்போக்கு ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.

 

 

தலைவலி மற்றும் வியர்த்தல்

உங்களுக்கு முதல் மூன்று மாதங்கள் தலைவலி மற்றும் வியர்வை ஏற்பட்டால் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அதற்கு பிறகு இரட்டை தலைவலி மற்றும் இரண்டாவது மூன்றுமாதங்களில் உங்கள் கைகள் மற்றும் முகங்களில் அதிக அளவில் வியர்வை வந்தால் மயக்கம் ஏற்பட்டாலோ நீங்கள் உயர் இரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று அர்த்தம். எனவே மருத்துவரிடம் செல்லுங்கள்.

கருவின் குறைவான அறிகுறிகள்

தினமும் உதைக்கும் கருவின் அசைவுகள் உங்களுக்கு தென்படாத வகையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு டம்ளர் பழச்சாறு அருந்துங்கள் இது உங்கள் குழந்தையின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் இடது பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் நீங்கள் எந்த வித அசைவுகளையும் உணரவில்லை என்றால் மருத்துவரிடம் செல்லுவது அவசியம்.

Related posts

பச்சை நிற உடையில் ரம்யா பாண்டியன்!நீங்களே பாருங்க.!

nathan

பெற்றால் மட்டும் போதுமா? நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்?

nathan

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்

nathan

இந்த 5 ராசிக்காரங்கள எல்லாரும் மனசுக்குள்ள ரொம்ப வெறுப்பாங்களாம்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் உயிரை எடுக்கும் வயிற்று வலியை குறைக்க.!

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

சமையலில் செய்யக்கூடாதவை !

nathan

கோடை வெயிலை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்

nathan

தனிப்பட்ட நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..

nathan