1556197267 6784
ஆரோக்கியம் குறிப்புகள்

உடலுக்கு நன்மை பயக்கும் செம்பருத்தி இலைகள் -அப்படி என்ன ஸ்பெஷல்?

செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை “மார்ஷ் மாலோ” என்றும் அழைக்கின்றனர்.

செம்பருத்தி
செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

செம்பருத்தி இலைகளில் உடல்நலம் பேணும் இன்னும் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது.
நாம் ஏற்கனவே சொன்னது போல் செம்பருத்தி இலைகளால் செய்யப்படும் தேநீர் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதனை உலகத்தில் உள்ள பல நாடுகளாலும் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து வருகிறது. இப்போது செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

– புற்றுநோயை எதிர்த்து போராடும் செம்பருத்தி இலைகள் புற்று நோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல்நல பயனாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம்.
செம்பருத்தி
– செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுதால், இதுவும் அதன் முக்கிய உடல்நல பயனாக உள்ளது.

– ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
– மெட்டபாலிச வீதத்தை அதிகரித்து உடலில் உள்ள நீர்ம சமநிலையை மேம்படுத்த செம்பருத்தி இலைகள் பெரிதும் உதவுவதால், இதுவும் ஒரு முக்கிய உடலநல பயனாக கருதப்படுகிறது.

– உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல்நல பயனாகும்.
– செம்பருத்தி இலை கலந்த தேநீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனமாக இருங்கள்.

சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகலாம். சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் இது உதவும்.

– செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், முக்கியமாக மாதவிடாய் காலத்தில் பெண்கள், அந்நேரத்தில் ஏற்படும் வழியை போக்கும். மேலும் செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…நாம் சாப்பிடும் உணவை வேகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்

nathan

சிறந்த பயன்தரும் சித்த மருத்துவ குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது?

nathan

இரவில் தூங்காவிட்டால் ஏற்டும் பிரச்சனைகள்

nathan

பெண்களே ஆண்களுடன் பழகும் போது…இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்…!

nathan

இந்த டூத் பேஸ்ட் ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் எனத் தெரியுமா?

nathan

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்

nathan

கர்ப்பமாக நினைக்கும் பெண்களுக்கு! கருமுட்டை வெளிப்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

nathan