28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
mom and baby
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தை எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறதா? பிரச்சனைக்கான தீர்வுதான் இது.!

Source:maalaimalarஎதற்காக குழந்தைகள் அழுதுக்கொண்டே இருக்கின்றன என்று தெரியாமல் பெற்றோர்கள் விழிபிதுங்கி விடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் அழுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவை குறித்து தற்போது விளக்கமாக காண்போம்..

* குழந்தைகள் முக்கியமாக பசியால் அழும். ஆனால் அவை பசிக்குத் தான் அழுகின்றன என்பதை அறிய, வாயில் விரலை வைத்தால், அந்த விரலை சப்ப ஆரம்பிக்கும். அவ்வாறு செய்தால். அவை பசிக்கு அழுகின்றன என்று அர்த்தம்.

* குழந்தைகள் ஈரப்பதம் அதிகரிக்கும் போது அழுகையை தொடங்கும். குழந்தைகள் இரவில் தூங்கும்போது, சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டால் அதன்மூலம் ஏற்படும் ஈரப்பதத்தின் காரணமாக அழும்.

* குழந்தைகள் நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அழுதால், அதற்கு தூக்கம் தேவைப்படுவதாக அர்த்தம். எனவே குழந்தையை மெதுவாக தூக்கி தோளில் தட்டி தூங்க வைக்க வேண்டும். மேலும், சில குழந்தைகள் கண்ணை மூடிக்கொண்டு அழும். அதற்கும் தூக்கத்திற்காக தான் குழந்தைகள் அழுகின்றது என்று அர்த்தம்.

* குழந்தைகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டுமே தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளும். அவ்வாறு இருக்கையில், குழந்தைகள் வேறு எதாவது புதிய இடங்களுக்கு சென்றால் அழும். குழந்தைகள் எப்போதுமே தங்கள் அசௌகரியத்தை அழுகை மூலமே வெளிப்படுத்தும்.

* குழந்தைகள் எப்போதும், அமைதியான சூழலையே விரும்பும். இதனால் வழக்கத்திற்கு மாறாக சத்தத்தை கேட்டால், குழந்தை இரைச்சலை தாங்க முடியாமல் பீறிட்டு அழும்.

* குழந்தைகள் சாப்பிடும்போது, வயிற்றுக்குள் காற்று புகுந்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகள் சாப்பிட்டு முடித்தவுடன் முதுகில் தட்ட வேண்டும். அப்போது வயிற்றில் இருக்கும் காற்று ஏப்பமாக வெளியேறும். இவ்வாறு தட்டாமல் இருப்பதாலும் குழந்தைகள் அழும்.

* சருமத்தில் அரிப்போ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அதனை அழுது குழந்தைகள் வெளிப்படுத்தும்.

* குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக பால் அல்லது திட உணவுகளை கொடுத்தால் வயிறு உப்பி, அந்த அவஸ்தையாலும் அழும்.

* குழந்தைகள் அழுவதற்கு இது தான் முக்கிய காரணமாக உள்ளது. குழந்தை அழகாக இருப்பதற்காக அதிக டிசைன்கள் நிறைந்த உடைகளை அணிவிப்பார்கள். இதனால் குழந்தைகள் அசௌகரியத்தால் அழும்.

* குழந்தைகள் எப்போதும் தாயின் அருகாமையையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும். தங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அழுகையின் மூலம் வெளிப்படுத்தும்.

இந்த 10 முக்கிய காரணங்களுக்கு குழந்தைகள் அழும். இது தவிர வேறு சில காரணங்களும் குழந்தைகள் அழுவதற்கு காரணமாக உள்ளது. இந்த காரணங்களை கண்டுபிடித்துவிட்டால், குழந்தையின் அழுகைகளை எளிதில் நிறுத்தி விடலாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க சில புத்திசாலித்தனமான வழிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சா உங்க எடையை சீக்கிரம் குறைச்சிடலாம் ?

nathan

மூளை பெரிதளவு பாதிப்படையும் குழந்தைகளின் தலையை வேகமாக அசைக்க

nathan

மேகி உண்ணுவது உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டாள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

nathan

முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழம்!…

nathan

வெப்ப தாக்கத்திலிருந்து குழந்தையை எப்படி பராமரிக்கலாம்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?

nathan

இந்த 5 ராசி ஆண்களுக்கு சிறிய வயதிலேயே செல்வந்தராகும் அதிர்ஷ்டம் இருக்காம்…

nathan