28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
tired 161859
ஆரோக்கியம் குறிப்புகள்

அடிக்கடி சீக்கிரம் சோர்வடைகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

நமது உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும் போது தான் களைப்பு அல்லது சோர்வை உணர்கிறோம். பொதுவாக நாம் மிகுந்த களைப்புடன் இருக்கும் போது, ஒரு கார்போனேட்டட் பானங்கள் அல்லது எனர்ஜி பார்களை சாப்பிட நினைப்போம். குறிப்பாக ஒரு கப் காபி, ஒரு கேன் எனர்ஜி பானம், கிரனோலா பார் அல்லது சில இனிப்பு பலகாரங்களை சோர்வாக இருக்கும் போது சாப்பிடத் தோன்றும்.

ஆனால் இது உண்மையிலேயே உதவுமா? ஆரோக்கியமானது தானா என்று கேட்டால், இந்த உணவுகள் உடலுக்கு ஆரம்பத்தில் ஆற்றலை அதிகமாக கொடுக்கலாம். அதே சமயம் எந்த அளவு வேகமாக உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறதோ, அதை விட அதிகமாக சோர்வை உணரக்கூடும். சரி, அப்படியானால் வேறு எந்த உணவுகளை உண்பது சிறந்தது என்று நீங்கள் கேட்கலாம். அந்த உணவுகள் எவையென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த உணவுகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

 

உணவுகள் எப்படி சோர்வைப் போக்க உதவுகிறது?

ஆரோக்கியமான உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கும் மற்றும் உடல் சோர்வை எதிர்த்துப் போராட உதவும். அதோடு ஆரோக்கியமான உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உண்ணும் போது, அது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். கீழே உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சில ஆரோக்கியமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்ய அவசியமானவை. எனவே நீங்கள் அடிக்கடி சோர்வை உணர்ந்தால், பசலைக்கீரையை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாதாம்

நட்ஸ் வகைகளில் மிகவும் பிரபலமானது தான் பாதாம். இந்த பாதாமில் நல்ல கொழுப்புக்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. பாதாமில் உள்ள புரோட்டீன் மற்றும் கொழுப்புகளின் கலவை, வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு, உடலுக்கு ஆற்றலையும் வழங்கும்.

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. 92% நீரால் ஆன இந்த கோடைக்கால பழம், பசியைத் தணிப்பதோடு உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. அத்துடன் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

சியா விதைகள்

சியா விதைகள் ஆற்றலுக்கான மிகச்சிறந்த மூலமாகும். ஏனெனில் இதில் கார்போரஹட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை காலையில் சாப்பிட்டால், அது ஒரு நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட தேவையான ஆற்றலை வழங்குகிறது.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம் ஒரு சுவையான உலர் பழம் மட்டுமின்றி, இதில் இயற்கை சர்க்கரை உள்ளதால், இது சர்க்கரை உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைப்பதோடு, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

முட்டை

முட்டையில் உயர் தர புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டு சத்துக்களும், உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளதால், இதை சாப்பிட உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் மற்றும் இது தசைப் பிடிப்புக்களைக் குறைக்கவும் உதவும்.

Related posts

ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு 18 வயது ஆவதற்கு முன்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை- வெளிவந்த தகவல் !

nathan

தலைவலி எதனால் வருகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

உடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழிமுறை

nathan

தெரிஞ்சிக்கங்க… கொடூர குணம் கொண்ட மிகவும் ஆபத்தான நாய் இனங்கள்!!!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. தைராய்டு பிரச்சனையின் போது உடல் எடையை குறைப்பது எப்படி?

nathan

சருமத்தை குளிர்ச்சியாக வைக்கும் பழ பேஸ் பேக்!

nathan

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

nathan

கர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது.

nathan