28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
29 carrot kootu
சமையல் குறிப்புகள்

சுவையான கேரட் கூட்டு

கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. எனவே இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. இந்த கேரட்டை கூட்டு செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும். அதிலும் இந்த கேரட் கூட்டு சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு அருமையான சுவையில் இருக்கும்.

பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த கேரட் கூட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Carrot Kootu Recipe
தேவையான பொருட்கள்:

கேரட் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
பாசிப்பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்க வேண்டும்.

கேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கேரட் கூட்டு ரெடி!!!

Related posts

சூப்பரான முள்ளங்கி குடைமிளகாய் மசாலா

nathan

வெண் பொங்கல் செய்வது எப்படி?

nathan

தீபாவளி ஸ்வீட்: கேழ்வரகு லட்டு செய்வது எப்படி?

nathan

காளான் பிரியாணி

nathan

சுவையான… வரமிளகாய் சட்னி

nathan

இனியெல்லாம் ருசியே! – 4

nathan

முருங்கைக்காய் மசாலா பிரட்டல்

nathan

சுவையான கடாய் காளான் கிரேவி

nathan

தக்காளி பேச்சுலர் ரசம்

nathan