குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறுஜென்மம் என்பார்கள். ஏனெனில் இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் உள்ளன.
சில பேருக்கு பிரசவம் என்பது சுகப் பிரசவ மாகவும், சில பேருக்கு சிசேரியன் அதாவது அறுவை சிகிச்சை முறையிலும் செய்யப்படுகிறது.
சிசேரியனுக்கு பிறகு சுகப் பிரசவம் சாத்தியமா?
சிசேரியனுக்கு பிறகு மற்றொரு குழந்தை பிறப்புக்கு சுகப்பிரசவம் செய்யலாமா? இதனால் தாய்க்கு சேயுக்கும் எதாவது பிரச்னை ஏற்படுமா? அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.
சிசேரியன்
இந்த அறுவை சிகிச்சை முறையில் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையை கர்ப்பபையை திறந்து குழந்தையை எடுக்கின்றனர். இதன் மூலம் தாயையும் குழந்தையும் எளிதாக பாதுகாக்க முடிகிறது.
சுகப்பிரசவம்
இது ஒரு பாரம்பரிய முறை. இந்த முறையில் குழந்தையானது யோனி வழியாக வெளியேற்றப்படுகிறது. இதில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஏற்கனவே உங்களுக்கு சுகப் பிரசவம் என்றால் அடுத்து நடக்கும் குழந்தை பிறப்பும் சுகப் பிரசவமாகவே அமைய வாய்ப்புள்ளது.
சுகப் பிரசவத்தில் இருக்கும் சிக்கல்கள்
நீண்ட நேர பிரசவ வலி
கர்ப்பபை சுருங்கி விரிதல் ஒழுங்கற்றதாக இருந்தால் குழந்தை பிறப்பு நீண்ட நேரம் எடுக்கும். தாயின் இடுப்பெலும்பு சரியான நிலையில் இல்லாவிட்டாலும் குழந்தையின் தலை திரும்பா விட்டாலும், யோனி பகுதி சுருங்கிய நிலையி் இருந்தால் குழந்தை பிறப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
குறை பிரசவம்
கர்ப்ப மடைந்த 37 வது வாரத்தில் குழந்தை பிறப்பு ஏற்பட்டால் குறை பிரசவம் நிகழ வாய்ப்புள்ளது. இது கர்ப்பபை வாய் சிதைவடைவதாலும், தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், ஊட்டச் சத்து பற்றாக்குறையாலும், தொற்று போன்றவற்றால் நிகழ வாய்ப்புள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை
கருவில் வளரும் குழந்தையின் அதிகப்படியான இதயத் துடிப்பு அல்லது மெக்கோனியம் அமினோட்டிக் அமிலத்தில் காணப்பட்டால், போதுமான ஆக்ஸிஜன் குழந்தைக்கு கிடைக்கா விட்டால் பிரசவம் சிரமமாகி விடும்.
ப்ரீச்சிங்
குழந்தை தலையை திருப்பாமல் பிறக்கும் போது இந்த மாதிரியான பிரச்சினை ஏற்படுகிறது. பிறப்பின் போது குழந்தையின் கால் வெளிவரும் போது இப்படி நிகழ்கிறது.
சுகப்பிரசவம் கடினமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசித்து செய்வது நல்லது.
வெற்றிகரமான சிகிச்சை
சிசேரியனுக்கு பிறகு சுகப் பிரசவம் மேற்கொள்ள கீழ்க்கண்ட தன்மைகள் இருந்தால் மேற்கொள்ளலாம். ஒரு சிசேரியனுக்கு பிறகோ அல்லது சிறிய அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ அதற்கு பிறகு சுகப்பிரசவம் ட்ரை பண்ணலாம்.
கருப்பையில் எந்த வித காயங்களும் இல்லாவிட்டால் சிசேரியன் மேற்கொள்ளலாம்.
பெண்களின் இடுப்பெலும்பு பகுதி சுகப்பிரசவத்திற்கு சரியான அளவில் இருந்தால் மேற்கொள்ளலாம்.
கருப்பை சிதைவு, மருத்துவ சிகிச்சையில் சிக்கல், முந்தைய பிரசவ பிரச்சினைகள், கருப்பை நார்த்திசுக்கட்டிகள்இருக்ககூடாது. டயாபெட்டீஸ், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பிறப்புறுப்பில் கட்டிகள் போன்ற பிரச்சினைகள் இருக்க கூடாது.
பயன்கள்
நச்சுக்கொடி பிரச்சினை போன்றவற்றை குறைக்கிறது
சிசேரியனை ஒப்பிடும் போது குறைந்த இரத்த இழப்பு, நோய் தொற்றும் குறைவு.
குடல் மற்றும் யோனி பகுதியில் ஏற்படும் அறுவை சிகிச்சை காயங்கள் இதில் இல்லை.
குழந்தை பிறப்பிற்கு பிறகு வலி குறைவு.
குறைப் பிரசவம் குறைவு, ஆரோக்கியமான குழந்தை பிறப்பு சாத்தியம்.
சுகப்பிரசவத்தில் பிறக்கின்ற குழந்தையின் நுரையீரல் வலிமையாக இருக்கும்.
விளைவுகள்
சுகப்பிரசவத்தில் குறைவான இறப்பு ஏற்படுகிறது. சிசேரியன் பிரிவில் கருப்பையில் கிழிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இரத்தக் கசிவு, குழந்தைக்கு ஆக்ஸிஜன் செல்லாது இருத்தல் போன்றவை ஏற்படும்.
சிசேரியனுக்கு பிறகு மேற்கொள்ளும் சுகப் பிரசவத்திற்கு தாய்க்கு செயற்கையாக ஆக்ஸிடோசின் என்ற மாத்திரை கொடுக்கப்பட்டு கருப்பை சுருங்கி விரிதலை செய்கிறது.
உங்களுக்கு மறுபடியும் சிசேரியன் செய்யும் போது இரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் குழந்தைக்கு நரம்பு மண்டல பாதிப்பு அல்லது குழந்தை இறப்பு கூட ஏற்படலாம்.
MOST READ: தொடர்ந்து 47 மணி நேரம் மலம் கழிக்காமல் இருந்தால் என்ன ஆகும்னு தெரியுமா? இதோ தெரிஞ்சிக்கோங்க…
சிசேரியனுக்கு பிறகு சுகப் பிரசவ தேவைகள்
சிசேரியனுக்கு பிறகு சுகப் பிரசவ தேவைகள்
தொடர்ந்து கருவில் வளரும் குழந்தையின் இதயத் துடிப்பை கண்காணித்து கொண்டு வர வேண்டும். இதில் எதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிசேரியனின் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.