26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
fgjio
ஆரோக்கிய உணவு

உங்களுக்காக சில டிப்ஸ் :!!! ன எல்லோரையும் டேஸ்ட்டான சமையலால் அசத்த வேண்டுமா?

* கீரையை கூட்டு வைக்கும்போது அதனுடன் சிறிது சர்க் கரை சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையின் நிறம் மாறாமல் பச்சையாகவே இருக்கும். * எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இருக்கமாகவே இருக்கிறதா?

கவலையே வேண்டாம். சிறிது எலுமிச்சம்பழச்சாற்றை சேருங்கள். சும்மா நச்சுன்னு அழகாக பிசையலாம், சப்பாத்தி மாவை!
* கோழி அல்லது ஆட்டு இறைச்சி வறுவல் செய்யும் போது, அதனுடனும் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை சேருங்கள். டேஸ்ட்டும், கமகம வாச னையும் சாப்பிடுவோரை திக்குமுக்காட செய்துவிடும்.
* குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறி களை வதக்கும்போது வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கிவிட்டு, அதன்பின்னர் தக்காளியை சேர்த்துப் பாருங்கள். குழம்பை பார்க்கவே அழகாக இருக்கும். டேஸ்ட்டும் அசத்தும்.
* நெய் காய்ச்சும்போது அதோடு சிறிது முருங்கை இலையையும் சேர்த்து காய்ச்சுங்கள். நெய் கமகம வென்று மணம் வீசும். அந்த நெய்யை பயன்படுத் தினால், சாப்பாட்டையும் ஒரு வெட்டு வெட்டலாம்.
fgjio
* தோசை மாவு புளித்து விட்டதா? 2 கை பிடி அளவு ரவையை அதனுடன் சேர்த்து கலக்கி, 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்னர் தோசை சுடுங்கள். புளிப்பு சுவை மாயமாய் மறைந்திருக்கும். தோசையும் சூப்பர் சுவையாக இருக்கும். மேலும், தோசை மாவு புளித்து விட்டால் அதனுடன் சிறிது பால் சேர்த்தும் தோசை சுடலாம். கல்லில் ஒட்டாமல் தோசை வரும். புளிப்பு சுவையும் இருக்காது.
* தோசை மாவு எளிதில் புளிக்காமல் இருக்க வேண்டுமா? மீதமுள்ள அந்த மாவிற்குள் ஒரு நீளமான பச்சை மிளகாயை கீறி போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் புளிப்பு சுவை அதிகமாக இருக்காது.
* பூரி அல்லது சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது பால் அல்லது முட்டையை சேர்த்து பிசையுங்கள். ரொம்பவும் சாப்ட் ஆக இருக்கும்.
* கடலெண்ணெய் கெடாமல் இருக்க வேண்டுமா? அதனுடன் சிறிதளவு புளியை உருட்டி போட்டு வையுங்கள். அந்த எண்ணெய் கெடவே கெடாது. * தேங்காய் பத்தையை தயிரில் போட்டு வைத்தால் 2 நாட்கள் வரையில் தயிர் கெட்டுப் போகாது.
* ஒரு கூடையில் பச்சைக் காய்கறிகளை போட்டு ஈரத்துணியால் அதை மூடி வைத்தால் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
* சுடு தண்ணீரில் சிறிது உப்பை போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தைவிட அதிக நேரம் சூடாக இருக்கும். * கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாட பரப்பி வைப்பது நல்லது. அப்போது தான் எளிதில் கெட்டுப் போகாது.
* சமையல் சோடாவைத் தண்ணீரில் கரைத்து பிரிட்ஜை துடைத்தால் பளபளப்புக்கு பஞ்சம் இருக்காது.
* அடுப்பு பர்னரில் ஏதாவது சிந்தி, மஞ்சள் நிறத்தில் ஜுவாலை ஏற்பட்டால், பர்னரை கழற்றி, உப்பு காகிதத்தால் தேய்த்தால், சிந்திய துகள்கள் நீங்கி, பர்னர் நீல நிறத்தில் எரியும்.
* பழைய நைலான் சாக்ஸ் இருந்தால், அதை, வாஷிங் திரவத்தில் தோய்த்து அடுப்பைச் சுத்தம் செய்தால், அடுப்பு பளபளப்பாகும்.
* ஒரு பாத்திரத் தில், சமையல் சோடா போட்டு தண்ணீர் ஊற்றிக் கலந்து, ஒரு நாள் இரவு முழுதும் பர்னரை போட்டு வைத்தால், பர்னர் அடைப்பு நீங்கி விடும்.
* கல் உப்பை மிக்சியில் போட்டு சிறிது நேரம் அரைத்தால், மிக்சி பிளேடு கூராகும். * பூண்டு, மசாலா பொருட்களின் வாசனை மிக்சியில் தங்கி விட்டால், ஒரு நாள் இரவு முழுதும் உப்புத் தண்ணீரை ஊற்றி வைத்து வாடையை நீக்கலாம்.
* புதினா நிறைய வாங்கி, வெயிலில் காய வைத்து, உப்பு, சீரகம் போட்டு பொடித்து, பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தயிரில் போட்டால், திடீர் தயிர் பச்சடி ரெடி. * எலுமிச்சை பழம் வாடாமல் இருக்க, சிறிதளவு தேங்காய் எண்ணெயை எலுமிச்சை மீது தடவி பிரிட்ஜில் திறந்து வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை “பிரெஷ்’ஷாகவே இருக்கும்.
* எலுமிச்சை பழத்தின் ஒரு மூடியை மட்டும் பயன்படுத்த வேண்டி இருந்தால், மற்றொரு மூடியை, அலுமினிய காகிதத்தில் பொட்டலம் கட்டி, பிரிட்ஜில் வைக்கலாம். வாடாமல் இருக்கும்.
* பழைய ஊறுகாய் ருசியின்றி காணப்பட்டால், சிறிதளவு கரும்பு ஜூஸ் கலந்தால் போதும்; புதிய ஊறுகாய் போல மணக்கும்.
* தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல்முமுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது.
* பாகற்காய்ப் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலைப் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாகத் தெரியும்.
* நெய் அப்பம் செய்யும் போது ஆழாக்கு பச்சிரியுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தும் பருப்பையும் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அப்பம் ரொம்பவும் மிருதுவாக வரும், அப்பக்காரலை உப்புப் போட்டுத் தேய்த்து அடுப்பில் ஏற்றிக் குழிகளைச் சிறிது நல்லெண்ணெய் விட்டுத் துடைத்துப்பின் நெய் விடவும் இப்போது சுலபமாக எடுக்க வரும். * பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லமா போட்டுச் சாப்பிடலாம்.

Related posts

டயட்டில் இருப்போருக்கான… ஓட்ஸ் உப்புமா

nathan

புரதச்சத்து நிறைந்த 5 உணவுகள்!

nathan

பழங்கள் தரும் பலன்கள்

nathan

கொண்டைக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

வேகமான உலகத்தில் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!!

nathan

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? தெரிஞ்சிக்கங்க…

nathan

வல்லாரை கீரையில் உள்ள வல்லமை இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் சப்ஜா

nathan

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

sangika