31.2 C
Chennai
Sunday, May 18, 2025
203116 cu
ஆரோக்கிய உணவு

கறிவேப்பிலையை இப்படி உணவில் சேர்த்தால் பல வகை நன்மைகள் கிடைக்குமாம்!

நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களில் கறிவேப்பிலை சேர்ப்பது வழக்கம்.

முக்கியமாக குழம்பு, பொரியல் போன்ற அனைத்திலுமே, தாளிக்கும் பொழுது கருவேப்பிலை இல்லாமலேயே இருக்காது.

 

இதனை வாசனைக்காக மட்டுமே உபயோகிக்க கூடிய ஒரு வாசனை பொருள் என்றே நம்மில் பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் உண்மையிலேயே கருவேப்பிலையில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன

 

தற்போது கறிவேப்பிலை எப்படி சேர்த்து கொண்டால் நன்மைகளை பெறலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

 

நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.
வயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.
4-5 நாட்கள் சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.
உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத் தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண, தினமும் 8-10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.
மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
செரிமான கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக உடனே செரிமான பிரச்சனைகள் குணமாகும்.

Related posts

இதயத்தை பலப்படுத்தும் திராட்சை

nathan

பழங்கள் தரும் பலன்கள்

nathan

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அதி சக்திவாய்ந்த பானம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்? இத படிங்க!

nathan

பன்னீர் பற்றி கவனத்தில் வைக்க வேண்டியவை

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா!

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… ப்ராக்கோலி சூப்

nathan

அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடுபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan