e 34
ஆரோக்கிய உணவு

தாமரை தண்டில் இவ்வளவு நன்மையா?அப்படி என்ன ஸ்பெஷல்?

பொதுவாக தாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் ஏராளமான சத்துக்கள், தனிமங்கள் மற்றும் விட்டமின்களான பி6, சி தாமரை கிழங்கில் நிறைந்துள்ளன. விட்டமின் சி தாமரை கிழங்கில் மிகுதியாக உள்ளது.

 

அதுமட்டுமின்றி சில நோய்களுக்கு அருமருந்தாகவும் திகழ்கின்றது.

 

அந்தவகையில் தற்போது இதனை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

 

தாமரை தண்டுகளை சாப்பிடுவதால் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பத்தை குறைக்கலாம்.
பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது.
சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும், ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
தாமரை வேரில் உள்ள போலேட் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய நரம்புக் குழாய் குறைபாடுகள் உள்ளிட்ட ஆபத்தான பிறப்புக் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
தாமரை வேர் பொடி அழற்சியை போக்க உதவுகிறது. தும்மல், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச அழற்சியை போக்க உதவுகிறது.
தாமரை வேரில் நார்ச்சத்துக்கள் இருப்பது நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலை போக்கி மலம் எளிதாக வெளியேற உதவுகிறது.
தாமரை வேரை சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து குறைபாடும் நீங்கும்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?

 

தாமரையை போலவே தாமரை கிழங்குகளும் கசப்பாக இருப்பதால், இதனை வேகவைத்து சூப்புகளில் சேர்த்து குடிக்கலாம்.

தாமரைக் கிழங்கு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெய்யில் பொரித்தும் சாப்பிடலாம்.

Related posts

கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள்..!

nathan

உங்களுக்கு தெரியுமா போலியான தேனை எப்படி கண்டறியலாம்?

nathan

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

nathan

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்

nathan

இனி பூசணி விதைகளை தூக்கி எறியாதீங்க!

nathan

சுவையான பாகற்காய் சட்னி

nathan

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்

nathan

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 10 பழச்சாறுகள்…

nathan