32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
இனிப்பு வகைகள்

ஆஹா பிரமாதம்- மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

பருப்புக்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பருப்பைக் கொண்டு சாம்பார் செய்வதற்கு பதிலாக தால் செய்து சாப்பிடுங்கள். நீங்கள் அந்த தால் ரெசிபிக்கே அடிமையாகிவிடுவீர்கள்.

சுவையான மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மைசூர் பருப்பு – 1 கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
பூண்டு – 7 பல்
கறிவேப்பிலை – சிறிது
நெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைக்கவும்.

* மைசூர் பருப்பை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு மஞ்சள் தூள், 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் பருப்பை கடைந்து வைக்கவும்

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து மசித்த பருப்பை வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பருப்பு தால் ரெடி!

* இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்திக்கு இந்த பருப்பு தால் சுவையாக இருக்கும்.

Related posts

சோள மாவு அல்வா: தீபாவளி ஸ்பெஷல்

nathan

தேன்குழல் – ஜாங்கிரி

nathan

கேரட் அல்வா…!

nathan

சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

nathan

பன்னீர் பஹடி

nathan

தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)

nathan

வீட்ல விசேஷமா? இந்த பிஸ்கட் லட்டு செஞ்சு பாருங்க!! ஈஸி ரெசிபி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: அராபிய சிறப்பு இனிப்பு வகைகள்

nathan

ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி

nathan